Social Icons

அன்புள்ள ராட்சசி - 6


 




அத்தியாயம் 10


வீங்கிப்போன முகத்துடன், அசோக்குக்கு மூக்கும் சேர்ந்து கிழிந்திருந்தது. அவனுடைய உருண்டையான நீளமான மூக்கின் மையப்பகுதியில், குறுக்குவாக்கில் ஒரு கீறல். தோல் பெயர்ந்து வந்திருக்க, அதன் வழியே ரத்தம் துளிர்த்திருந்தது. அன்டர்டேக்கர் தன் விரலில் அணிந்திருந்த மண்டையோடு மோதிரம்தான் அதற்கு காரணமாயிருக்க வேண்டும். அசோக் மூக்கை இருபுறமும் பிடித்துக்கொண்டு, 'உஷ்.. உஷ்.. உஷ்..' என உதடுகள் குவித்து காற்று ஊதிக்கொண்டிருந்தான். மீரா தன் பேகை கையிலெடுத்து பக்கவாட்டு ஜிப்பை திறந்தாள். உள்ளே விதவிதமாய் மாத்திரைப் பட்டைகள்.. ஒன்றிரண்டு ஆய்ன்மென்ட்கள்.. பேண்டேஜ்.. பிளாஸ்டர்..!!

"ம்ம்.. கையை எடு..!!" மீரா சொல்ல, அசோக் மூக்கிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டான்.

மீரா அசோக்கின் மூக்கில் கொஞ்சமாய் கொப்பளித்திருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். அப்புறம் ப்ளாஸ்டர் பிரித்து, சரக்கென இழுத்து, அசோக்கின் மூக்குக்கு குறுக்காக அழுத்தமாக ஒட்டிவிட்டாள்.


"ஹ்ஹ்ஹ்ஹா..!!" வேதனையில் முனகினான் அசோக்.

"ப்ச்.. ரொம்ப பெனாத்தாத..!! ஒன்னுல்ல.. ஒரே நாள்ல சரியாயிடும்..!!"

மீரா கூலாக சொல்லிக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் அண்டர்டேகரும், ஜான் ஸீனாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். நடந்து இவர்களை நெருங்கியவர்கள், அசோக்கின் முதுகை செல்லமாக தட்டினர்.

"வாய் ப்ராப்பர் இல்லே உன்க்கு.. அதான் மூக்லே ப்ளாஸ்டர்..!!" என்றான் அண்டர்டேகர்.

"டேக் கேர் பாய்..!!" என்று கிண்டலாக சொன்னான் ஜான் ஸீனா. கேஷுவலாக சொல்லிவிட்டு இருவரும் திரும்பி நடந்தார்கள்.

"ஏய்.. போங்கடா..!! மூக்கை பேத்துட்டு.. டேக் கேராம்.. டேக் கேர்..!!"

மீரா அவர்களுடைய முதுகை பார்த்து சீறினாள். டேபிளில் கிடந்த மிளகாய் துகள் பாக்கெட்டுகளை அள்ளி, அவர்கள் மீது வீசினாள். அவர்கள் இருவரும் அவளை கண்டுகொள்ளமல் அங்கிருந்து அகன்றனர். அண்டர்டேகர் மட்டும் திரும்பிபார்த்து ஒருமுறை 'க்யா..??' என்று வாயை பிளந்தான்.

"ப்ச்.. விடு மீரா.. அவனுகளை எதுக்கு திட்டுற..??" அசோக் சலிப்பாக சொன்னான்.

"ஏன்.. திரும்ப வந்துடுவானுகனு பயமா..??" மீராவின் குரலில் ஒரு நக்கல்.

"இல்ல.. அவனுக மேல எதுவும் தப்பு இல்லைன்னு எனக்கு தோணுது..!!"

"ஓ..!! இது எப்போ இருந்து..?? அவனுக ரெண்டு அப்பு அப்புனதுல இருந்தா..??"

"இல்ல.. அதுக்கு முன்னாடியே ஒரு மைல்ட் டவுட் வந்தது.. நான்தான் கொஞ்சம் மெதப்புல பேசிப்புட்டேன்..!!"

"எ..என்ன சொல்ல வர்ற..??"

"உண்மைய சொல்லு மீரா.. நீதான அவனுகளை பாத்து கண்ணடிச்ச..??" அசோக் அந்த மாதிரி நேரிடையாகவே கேட்டுவிட, இப்போது மீரா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள்.

"ஏன்.. அவனுகள்ட்ட வாங்குனதுலாம் பத்தலையா..??" என்று முஷ்டியை முறுக்கினாள். அசோக் நொந்து போனான்.

"ஐயோ தாயே.. ஆளை விடு.. உன்னை நான் ஒன்ன்ன்னும் கேக்கல..!!" என்றவாறே அவன் கைகூப்ப, மீராவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹாஹாஹாஹா..!!" கலகலவென சிரித்தாள்.

"அவனுக குடுத்ததே மூஞ்சிலாம் வின்வின்னுனு தெறிக்குது..!!" அசோக் சோகமாக சொல்ல, மீரா இப்போது அவனை சற்றே பரிதாபமாக பார்த்தாள்.

"ரொம்ப வலிக்குதா..??" அவளுடைய குரலில் புதிதாக ஒரு கனிவு.

"ம்ம்.. முடியல..!! அவனுகட்ட இருக்குறது கையா தும்பிக்கையான்னு தெரியல..!!"

"ஹாஹா.. சரி.. இரு.." சிரிப்புடன் சொன்ன மீரா, பேகிற்குள் கைவிட்டாள். சிவப்பாய் இருந்த இரண்டு மாத்திரகளை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

"இந்தா.. இதை இப்போ ஒன்னு போட்டுக்கோ.. நைட்டும் பெயின் இருந்தா இன்னொன்னு போடு.. பெயின் தெரியாது.. மார்னிங் யூ வில் பீ ஆல்ரைட்..!!"

"ஹ்ம்ம்.. அது சரி.. இதென்ன.. பைக்குள்ளயே ஒரு ஃபார்மஸி வச்சிருக்குற..??"

மாத்திரைகளை வாங்கிக்கொண்டே, அசோக் அந்த மாதிரி இயல்பாக கேட்கவும், மீராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. குப்பென ஒரு சோகம் எங்கிருந்தோ அவளது முகத்தில் வந்து அப்பிக்கொண்டது. உதடுகளை மடித்து பற்களால் கடித்துக் கொண்டவள், தலையை மெல்ல குனிந்து கொண்டாள். அசோக் எதுவும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்த மீரா, பிறகு குரலில் புதுவிதமாய் ஒரு சோகம் வழிந்தோட, திக்கி திணறி சொன்னாள்.

"எ..எனக்கு.. எனக்கு 'அரித்மொஜெனிக் வென்ட்ரிகுலார் டிஸ்ப்ளேசியா' அப்டின்னு.. ஒ..ஒரு டிஸீஸ் இருக்கு அசோக்..!!" மீரா சொல்ல அசோக்கிடம் ஒரு சீரியஸ்னஸ். குழப்பமாய் நெற்றியை சுருக்கினான்.

"வா..வாட்ஸ் தேட்..?? அ..அரித்மேடிக்..??"

"ப்ச்.. அரித்மேடிக்கும் இல்ல.. அல்ஜீப்ராவும் இல்ல.. அரித்மொஜெனிக்..!! ரொம்ப ரொம்ப ரேரான ஹார்ட் டிஸீஸ்..!! ஸா..ஸாரி.. உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும்.. மறைச்சுட்டேன்.. ஸாரி..!!" அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித கலவரம்.

"வெ..வெளையாடாத மீரா..!!"

"இதுல வெளையாடுறதுக்கு என்ன இருக்கு..??"

"ரொ..ரொம்ப.. ரொம்ப மோசமான வியாதியா அது..??"

"ஆமாம்.. ஹார்ட் ப்ராப்பர் ஷேப்ல இருக்காது.. ஒரு சைட் மட்டும் ஓவரா வீங்கிருக்கும்.. ஹார்ட் பீட் ரொம்ப அப்னார்மலா இருக்கும்.. ப்ளட் ஸர்க்குலேஷன் ஒழுங்கா இருக்காது..!!"

"ஓ..!! இ..இதை சரி பண்ண முடியாதா மீரா..?? ச..சர்ஜரி ஏதாவது பண்ணினா..??"

"ம்ஹூம்.. இந்த டிஸீஸ்கு எந்த ட்ரீட்மன்ட்டும் இல்ல..!! இ..இப்போ.. இப்போ நான் ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல வேற இருக்கேன் அசோக்.. இத்தனை நாளா என் ஹார்ட் துடிச்சுட்டு இருந்ததே பெரிய அதிசயம்.. இ..இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல.. எப்போவேனா ஹார்ட் அட்டாக் வந்து.. நா..நான் மண்டையை போட்டுடலாம்..!!" மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அப்படியே துடித்து போனான்.

"பச்.. எ..என்ன மீரா நீ..?? இ..இப்படிலாம் இனிமே பேசாத ப்ளீஸ்..!! எதை இழந்தாலும்.. நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.. தெரியுமா.?? உ..உனக்கு.. உனக்கு ஒன்னும் ஆகாது மீரா.. நான் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்.. என்னை நம்பு.. நான் இருக்கேன்ல..?? நான் எப்படியாவது.. ஏதாவது செஞ்சு.. உ..உன்னை நான்.. உன்னை.." அசோக் அவள் மீதான காதலுடன் பதற்றமாய் பேசிகொண்டிருக்க, மீரா அவனுடைய முகத்தில் மிதந்த உணர்சிகளையே ஒருசில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்,

"ச்சோ.. ச்வீட்..!!" என்றாள் திடீரென ஒரு அழகுப் புன்னகையுடன்.

"என்ன நீ.. சும்மா சும்மா ஸ்வீட் காரம்னுட்டு..??" அசோக் இப்போது பேசுவதை நிறுத்திவிட்டு, அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

"ஹாஹாஹாஹா..!!" அவளோ எளிறுகள் தெரிய சிரித்தாள்.

"ஏ..ஏன் சிரிக்கிற..??"

"ஹாஹா.. பின்ன என்ன..?? என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!! நான் சும்மா லுல்லுலாயிக்கு சொன்னேன்..!!"

"என்னது..?? லுல்லுலாயிக்கா..??" அசோக் எரிச்சலாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

"ஹ்ம்ம்.. என்னைப் பாத்தா என்ன ஹார்ட் ப்ராப்ளம் இருக்குறவ மாதிரியா இருக்கு..?? ம்ம்..??"

என்றவாறே மீரா இப்போது சரக்கென நிமிர்ந்து அமர்ந்தாள்..!! ஷோல்டர்கள் இரண்டையும் சற்றே பின்னுக்கு தள்ளி.. அவள் அந்த மாதிரி விறைப்பாக நிமிரவும்.. அவ்வளவு நேரம் பம்மிக்கொண்டு கிடந்த அவளது மார்புப் பந்துகள் ரெண்டும்.. இப்போது குபுக்கென நிமிர்ந்து நின்றன..!! அவள் அணிந்திருந்த மெல்லிய மஞ்சள் நிற டிஷர்ட்டுக்குள்ளாக.. தங்களது கண.. மற்றும்.. கன.. பரிமானங்களையும் காட்டிக்கொண்டு.. திம்மென விம்மிப்போய் காட்சியளித்தன..!! அந்த காட்சியை மிக அருகில் இருந்து பார்த்த அசோக்குடய ஹார்ட்.. உடனடியாய் ஒரு அட்டாக் வாங்கி துடிதுடியென துடித்தது..!! 'உப்' என்று மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்ட அசோக்.. அப்புறம் சிறிது நேரத்திற்கு அப்படியே மூர்ச்சையாகிப் போனான்..!! அவளுடைய அரைக்கோள வடிவழகில் இருந்து பார்வையை அகற்றிக்கொள்ள.. அரும்பாடு பட வேண்டியது இருந்தது அசோக்கிற்கு..!! திணறினான்.. தடுமாறினான்..!!

"எ..என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..??" அசோக் அட்டாக் வந்து அரண்டு போயிருப்பதை மீரா அறியவில்லை. இன்னுமே தனது அங்கங்களின் எழுச்சியை அவள் அடக்க முயலவில்லை.

"இ..இல்ல.." அசோக் திருதிருவென விழித்தவாறே சொன்னான்.

"என்ன இல்ல..??"

"எ..எதும்.. ப்ராப்ளம் இருக்குற மாதிரி இல்ல..!!" திணறலாக சொன்னபோதே அசோக்கின் பார்வை, திருட்டுத்தனமாய் அவளது நெஞ்சை மேய்ந்தது.

"ஹ்ம்ம்.."

மீரா இப்போது விறைப்பு நீங்கி இயல்பாக அமரவும்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் திமிர் அடங்கிப்போய்.. மீண்டும் பனியனுக்குள் பதுங்கின..!! அசோக்குக்கு அப்புறம்தான் சுவாசம் சீரானது..!!

"யப்பாஆஆ...!!" என்றான் நிம்மதி பெருமூச்சுடன்.

"என்ன யப்பா..??"

"ஒ..ஒன்னுல்ல..!!"

"என்ன ஒன்னுல்ல.. சம்பந்தமில்லாம யப்பான்னுட்டு.. அப்புறம் ஒன்னுல்லன்ற.. லூஸா உனக்கு..??"

"ம்க்கும்.. எனக்கு லூஸா..?? உனக்குத்தான் ரொம்ப டைட்டு..!!"

"வாட்..????" மீரா முகத்தை சுளித்து கத்தினாள்.

"ஹையோ.. ஒன்னுல்லன்னு சொன்னா விடேன்..!! அதையே நோண்டி நொண்டி கேட்டுட்டு இருப்ப..?? சரி.. நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே..??"

"என்ன கேட்ட..??"

"பேக்ல எதுக்கு இவ்வளவு டேப்லட்ஸ் வச்சிருக்குறன்னு கேட்டேன்..!!"

"ப்ச்.. அதுவா.?? ஸ்பெஷலாலாம் எதும் ரீஸன் இல்ல.. அது ஜஸ்ட் என் ஹேபிட்..!! நமக்கு திடீர்னு கோல்ட் வரலாம்.. ஹெட்-ஏக் வரலாம்.. இல்லனா யாராவது ஓங்கி நம்ம மூஞ்சில பன்ச் விட்டு.. மூக்கை பஞ்சர் ஆக்கலாம்.. ஹாஹாஹா.." மீரா பேச்சுக்கு இடையே நக்கலாக சிரிக்க,

"ம்ம்.. ம்ம்.." அசோக் மூக்கு ப்ளாஸ்டரை தடவிக்கொண்டே அவளை முறைத்தான்.

"ஹ்ம்ம்.. அந்த நேரத்துல பக்கத்துல ஃபார்மஸி இருக்குதோ இல்லையோ.. அதான் பைக்குள்ளயே ஒரு மினி ஃபார்மஸி..!!"

"ஓ..!! நல்ல ஹேபிட்தான்..!!"

"இப்போ.. திடீர்னு எனக்கு சூசயிட் பண்ணிக்கனும்னு தோணுச்சுனு வச்சுக்கோயேன்.. ஒரு டென்ஷனும் இல்ல..!! தூக்கமாத்திரை டப்பா ஒன்னு இருக்குது.. அதை அப்படியே வாய்க்குள்ள கொட்டிட்டா போதும்.. மேட்டர் முடிஞ்சது.. கதம் கதம்..!!" மீரா சொல்லிவிட்டு நாக்கை வெளியே துருத்தி காட்ட, அசோக்கால் ஏனோ அவளுடைய பேச்சை ரசிக்க முடியவில்லை.

"ஐயே.. என்ன பேச்சு இது..?? தூக்க மாத்திரை அது இதுன்னுட்டு..??" என்றான் எரிச்சலாக.

"அட.. என்னப்பா நீ.. தூக்க மாத்திரையை இப்படி சீப்பா சொல்லிட்ட..?? சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷன் யு நோ..!! மத்ததெல்லாம் ச்சால பெயின்ஃபுல்..!!"

"ஷ்ஷ்ஷ்... ப்பாஆஆ.. முடியல..!!"

"என்ன.. ரொம்ப முடியலையா..?? நான் குடுத்த பெயின் கில்லர் போட்டுக்கோ.. அப்புறம் மூக்கு வலிக்காது..!!"

"நான் மூக்கை சொல்லல.. உன் மொக்கையை சொன்னேன்..!! தா...ங்க முடியல மீரா..!! வேற ஏதாவது பேசுறியா..??"

"வேற.. வேற என்ன பேசுறது..?? வேற ஒன்னுல்ல போ..!! சரி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!"

"ஹேய்.. இரு இரு.."

"என்ன..??"

"நா..நாளைக்கு.. நாளைக்கு இங்கயே இதே டைம்ல மீட் பண்ணலாம்ல..??"

"ஹாஹா.. நாளைக்கா..?? நாளைக்கு சான்சே இல்ல..!!"

"ஏன்..??"

"நாளைக்கு நான் வர மாட்டேன்..!!"

"அதான் ஏன்னு கேக்குறேன்..??"

"ஏன்னா.. என்ன சொல்றது..?? நாளைக்கு எனக்கு வேற அப்பாயிண்ட்மண்ட் இருக்கு..!!"

"வே..வேற என்ன அப்பாயிண்ட்மண்ட்..??"

"ஆக்சுவலா நாளைக்கு.."

என்று ஆரம்பித்த மீரா, உடனே பட்டென நிறுத்தினாள். ஏதோ யோசனையாய் நெற்றியை கீறினாள். கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தாள் . பிறகு குரலில் ஒரு புதுவித உற்சாகத்துடன் கத்தினாள்.

"ஹேய் அசோக்.. உன்கிட்ட பைக் இருக்குன்னு சொன்னேல..??"

"ம்ம்.."

"அப்போ.. இப்படி பண்ணலாமா..??"

"எப்படி..??"

"நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஜா...லியா ஊர் சுத்தலாமா..??"

அவள் அவ்வாறு கண்களில் ஒரு மின்னலுடன் கேட்கவும்.. அசோக்கிற்கு குப்பென்று இருந்தது... குளுகோஸ் சாப்பிட்டது மாதிரி.. எனர்ஜியுடன் நிமிர்ந்து அமர்ந்தான்..!! விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. வாயெல்லாம் பல்லாக கேட்டான்..!!

"மீரா.... எ..என்ன மீரா சொல்ற நீ..??"

"ஹ்ம்ம்.. உனக்கு ஓகே வா..?? நாளைக்கு ஃபுல் டே.. நீயும் நானும் மட்டும்.. யார் டிஸ்டர்பன்ஸும் இல்லாம.. தனித்தனியா..!!!"

"என்னது..??? தனித்தனியாவா..???" அசோக் படக்கென முகம் சுருங்கிப்போனவனாய் கேட்டான்.

"ஐயோ.. தனியா..!!!! நீயும் நானும் மட்டும் தனியான்னு சொன்னேன்..!! உனக்கு ஓகேவா..??"

"எ..என்ன கேள்வி இது மீரா..?? உ..உன்கூட தனியா ஊர் சுத்துறதுனா.. எவ்ளோ ஜாலியா இருக்கும்.. அதை எப்படி நான் வேணாம்னு சொல்வேன்..?? எனக்கு டபுள் ஓகே..!! நீ.. நீ... உ..உன்னை.. எப்போ எங்க வந்து பிக்கப் பண்ணனும்னு மட்டும் சொல்லு..!!"

"ம்ம்ம்ம்ம்... நாளைக்கு காலைல.. ஒரு ஒன்பது மணிக்குலாம் வடபழனி பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துடுறியா..??"

"ஓகே.. டன்..!!"

"ம்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு மேட்டர்..!!"

"என்ன..??"

"உன் பைக் எவ்ளோ போகும்..??"

"அது என்ன.. ஒரு லிட்டருக்கு முப்பத்தஞ்சு.. நாப்பது கிலோமீட்டர் போகும்..!!"

"ஐயோ.. நான் அதை கேக்கல..??"

"அப்புறம்..??"

"அதை வித்தா.. எவ்ளோக்கு போகும்னு கேட்டேன்..??" மீரா கேஷுவலாக கேட்க, அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது.

"என்னது..?? வி..வித்தாவா..?? அ..அதுலாம் ஏன் கேக்குற..??"

"அட சும்மாபா.. எந்த மாதிரி பைக்குனு எனக்கு ஒரு ஐடியா வேணும்ல.. அதுக்கு கேட்டேன்..!!"

"அ..அதுக்கு.. எந்த கம்பனி பைக்னு கேட்கலாம்ல..??"

"எனக்கு பைக் கம்பனி பத்திலாம் ஐடியா இல்ல.. அதான் பைசா பத்தி கேக்குறேன்..!!"

"ஓ..!! ம்ம்ம்... அது ஒரு நாப்பதாயிரம், அம்பதாயிரம் போகும்..!!"

"ஓ.. ஓகே ஓகே..!! எனக்கும் டபுள் ஓகே..!!" முகம் முழுதும் பிரகாசமாகிப் போக, மீரா இப்போது அழகாக சிரித்தாள்.

"ச்சலோ..!!" என்றவாறு பேக் எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

இருவரும் ஃபுட் கோர்ட் விட்டு வெளியே வந்தார்கள்.. 'பை.. ஸீ யு டுமார்ரோ..' சொல்லிக்கொண்டார்கள்..!! மீரா வடபழனி பஸ்டாண்ட் இருந்த திசையை நோக்கி நடக்க.. அசோக் அவனுடைய ஆபீஸ் இருந்த பக்கமாய் திரும்பினான்..!! அப்புறம் சிறிது நேரம் கழித்து.. அசோக்கின் ஆபீஸில்..

"ஃபுட்கோர்ட்ல.. ஸ்டெப்ஸ் விட்டு எறங்குற எடத்துல.. சைடுல ஒரு டோர் இருக்குதுல..??" அசோக் கேட்க,

"ஆமாம்..!!" அவனை சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் மூவரும் கோரஸாக சொன்னார்கள்.

"செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேர்டா.. கொஞ்சம் கூட அறிவே இல்ல அவனுகளுக்கு.. நான் இந்தப்பக்கம் இருக்குறது தெரியாம.. படார்ர்ர்னு கதவை தள்ளிட்டானுக மச்சி..!! யப்பா.. செம அடி.. மூஞ்சிலயே.. மூக்கு வேற கிழிஞ்சு போச்சு..!! அவனுக ரெண்டு பேரும் 'ஸாரி ஸார்.. ஸாரி ஸார்..'ன்னு.. கால்ல விழாத கொறையா கெஞ்சுனானுக.. அவனுகளை அப்படியே ரெண்டு விடலாம் போல ஆத்திரம் எனக்கு..!! ப்ச்.. என்ன பண்றது.. ஆக்ஸிடன்ட் மாதிரி ஏதோ ஆகிப் போச்சு.. அவனுகளை அடிச்சு நமக்கு என்ன கெடைக்கப் போவுது சொல்லு..?? 'பரவால பாஸ்.. ஃப்ரீயா விடுங்க..'ன்னு சொல்லிட்டேன்..!! மீராதான் பாவம்.. எனக்கு அடிபட்டுச்சுன்னு தெரிஞ்சதும்.. அப்படியே துடிச்சு போயிட்டா தெரியுமா..?? அவ கண்ணுல அப்படியே பொலபொலன்னு கண்ணீர் வந்துடுச்சு மச்சான்..!! ஹ்ம்ம்.. அப்புறம் அவதான் காயத்தைலாம் க்ளீன் பண்ணி.. இந்த ப்ளாஸ்டர் போட்டுவிட்டா..!!" மனசாட்சியே இல்லாமல் புழுகிய அசோக்,

"ப்ளாஸ்டர் நல்லா அழகா போட்டு விட்ருக்காள்ல..??" என்று வெட்கமே இல்லாமல் இளித்தான்.

நண்பர்கள் மூவரும் எதுவும் பேசவில்லை. அசோக் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டவர்கள், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டிக்கொள்ளாமல், இவனையே ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். ஒருவித நமுட்டு சிரிப்பு சிரித்தார்களே ஒழிய, நம்பிக்கை என்பது துளி கூட அவர்கள் முகத்தில் தென்படவில்லை. அவர்கள் அமைதியாக இருந்ததில் இருந்தே, அவர்களுடைய எண்ணத்தை அசோக் புரிந்து கொண்டான். இப்போது முகத்தையும், குரலையும் ஒரு மாதிரி பாவமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

"ஏய்.. சத்தியமா அவ அடிக்கலடா..!!"

"கன்ஃபார்ம்ட் மச்சி..!! சத்தியமே பண்ணிட்டான்.. அப்படினா சத்தியமா அவதான் சாத்து சாத்துன்னு சாத்திருக்கா..!! ஹாஹா..!!" சாலமன் சொல்லிவிட்டு சிரித்தான்.

"த்தா.. சத்தியம் பண்றேன்.. அப்புறமும் நம்ப மாட்டீங்களாடா..??"

"சத்தியந்தான..?? நாங்க எவ்ளோ சத்தியம் பண்ணிருப்போம்.. எங்களுக்கு தெரியாதா சத்தியம் பண்ணினா என்ன மீனிங்னு..??" வேணுவும் கிண்டலாகவே சொன்னான்.

"போங்கடா வெண்ணைகளா.. நடந்ததுலாம் உள்ளது உள்ளபடி சொல்லிருக்கேன்.. அதுக்கு மேலயும் நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது..??"

"நீ நம்புறது மாதிரி எதுவுமே சொல்லலையே மச்சி..!! அந்த டோர் மேட்டர் கூட பரவால.. ஆனா.. உனக்கு அடிபட்ருச்சுனதும் அப்படியே அவ துடிச்சு போயிட்டான்ற.. கண்ணுல அப்படியே கண்ணீரா கொட்டுச்சுன்ற.. எதுவுமே நம்புறது மாதிரியே இல்லையடா..?? ஷகீலா சாமி கேரக்டர்ல நடிக்கிறாங்கன்ற மாதிரி இருக்கு..!!" - இது கிஷோர்.

"ஏன்டா..?? எனக்கு அடிபட்டுச்சுனா அவ துடிக்க மாட்டாளா...?? அன்னைக்கு எவன் மேலயோ இருந்த கோவத்துல, என் மூஞ்சி முன்னாடி செருப்பை நீட்டிட்டா.. நேத்து ஏதோ ஒரு அவசரத்துல ரெண்டு நம்பர் மாத்தி சொல்லிட்டா.. அதுக்காக அவளுக்கு என் மேல ப்ரியம் இல்லன்னு ஆயிடுமா..?? என்மேல அவ எவ்வளவு லவ் வச்சிருக்கான்னு.. நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.. உங்களுக்குக்குத்தான் இன்னும் புரியல..!! உங்களுக்கு இன்னொன்னு சொல்லவா..??"

"என்ன..??"

"நாளைக்கு நானும் அவளும்.. ஃபுல்டே ஜாலியா ஊர் சுத்தப் போறோம்..!!"

அசோக் அவ்வாறு பெருமையாக சொல்ல, இப்போது மற்ற மூவருடைய முகமும் படக்கென இருண்டு போனது. மூவரும் அசோக்கையே ஒருவித பொறாமையும், நம்பிக்கையின்மையுமாய் ஒரு பார்வை பார்த்தனர்.

"எ..என்னடா மச்சி சொல்ற..??" வேணு பரிதாபமாக கேட்டான்.

"நம்ப மாட்டின்கன்னு தெரியும்.. நாளைக்கு போயிட்டு வந்து என்னோட எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன்.. அப்போ நம்புனா போதும்..!! அப்புறம்.. இந்த ஊர் சுத்துற ஐடியா ப்ரோபோஸ் பண்ணினது யார்னு நெனைக்கிறீங்க.. சத்தியமா நான் இல்ல.. அவளேதான்..!! ஹ்ஹ.. அவளைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க வேண்டியது நெறைய இருக்குடா..!! ம்ம்ம்ம்... நாளைக்கு காலைலேயே கெளம்புற மாதிரி ப்ளான்.. அப்படியே பார்க், பீச், மூவின்னு கவலையே இல்லாம சுத்திட்டு, திரும்ப வர்றதுக்கு எப்படியும் லேட்நைட் ஆயிடும்னு நெனைக்கிறேன்.. ஸோ.. நாளைக்கு என்னால ஆபீஸ் வர முடியாது..!!"

"ஹேய்.. நாளைக்கு அந்த 'பேச்சி பெருங்காயம்' ஷூட்டிங் இருக்குடா.. நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போறேன்ற..??" சாலமன் திடீரென ஞாபகம் வந்தவனாய் சொன்னான்.

"ஆமாண்டா.. நாளைக்கு விட்டா.. அப்புறம் பரவை முனியம்மா கால்ஷீட் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்..!! அப்புறம்.. அந்த மோகன்ராஜ் கெடந்து தையதக்கான்னு குதிப்பான்.. பே..பேசாம நீ ப்ளானை கேன்ஸல் பண்ணிடு மச்சி..!!" என்றான் வேணு, எப்படியாவது அசோக்கின் ஆசையில் மண்ணை போட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன்.

"ஹேய்.. அதான் கிஷோர் இருக்கான்ல.. எல்லாம் அவன் பாத்துப்பான்..!! ஏன்னா.." அசோக் கேஷுவலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"அவன்தான் இளிச்சவாயன்..!!!!" என்றான் கிஷோர் கடுப்புடன்.

"என்ன மச்சி இப்படி சொல்லிட்ட.. என் உயிர் நண்பன்னு சொல்ல வந்தேண்டா..!!"

"ம்க்கும்.. ரெண்டும் ஒண்ணுதான்..!!"

"ஹேய்.. ப்ளீஸ்டா..!! ஃபர்ஸ்ட் டைம் நானும் அவளும் வெளில போறோம்.. கொஞ்சம் உன் ப்ரோக்ராம் கேன்ஸல் பண்ணிட்டு இதை கவனிச்சுக்கோயேன்.. ப்ளீஸ்..?? நீயும் சங்கியும் ஊர் சுத்த போறப்போலாம்.. எத்தனை தடவை உன்னோட வேலையும் சேர்த்து நான் கவனிச்சிருப்பேன்.. அதெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோ மச்சி..!!"

"சரி சரி.. போய்த்தொலை.. ஐ வில் டேக் கேர்..!!"

"தேங்க்ஸ் மச்சி..!!" அசோக் கிஷோரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் இப்போது ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

"ஹ்ம்ம்.. உங்க வண்டி ஓவர் ஸ்பீடா போற மாதிரி எனக்கு தோணுது அசோக்.. பாத்து.. எங்கயாவது ஆக்சிடண்ட்னு முட்டிக்கிட்டு நிக்கப் போவுது..!!"

"என்னடா சொல்ற..??"

"ஆமாம்.. பேசுன மொத நாளே ஐ லவ் யூ சொல்லிக்கிட்டிங்க.. இப்போ மூணாவது நாளே ஊர் சுத்த கெளம்பிட்டிங்க.. ரொம்ம்ப ஸ்பீடா போறீங்கடா.. அதான் சொல்றேன்..!!" சாலமனின் பேச்சில் பொறமை மிதமிஞ்சிப் போயிருந்தது. அதை புரிந்து கொண்ட அசோக் நக்கலான குரலில் சொன்னான்.

"ஹாஹா..!! பொறாமை..???? ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஆனா அதுக்குலாம் நாங்க ஒன்னும் செய்ய முடியாது..!! ம்ம்ம்.. இந்த ரெண்டு நாள்லயே அவளைப் பத்தி நான் எவ்வளவோ புரிஞ்சுக்கிட்டேன்.. அதேமாதிரி.. இனிமே வர்ற ஒவ்வொருநாளும் அவளைப் பத்தி இன்னும் என்னன்னவோ புரிஞ்சுக்கப் போறேன்..!! யு ஜஸ்ட் வெயிட் அண்ட் ஸீ..!!"



அத்தியாயம் 11


நாள் - 3

காலை 9.45 மணி..!! அசோக்கும் மீராவும்.. அடையாறு கஸ்தூர்பா நகரில்.. ஏழாவது மெயின் ரோடும், எட்டாவது மெயின் ரோடும்.. முட்டிக்கொள்கிற இடத்தில் சாலையோரமாக நின்றிருந்தார்கள்.!!

"குட் மார்னிங்.. நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்..!! எங்க.. சொல்லு பார்ப்போம்..??"

"கு..குட் மார்னிங்.. நா..நான் அனோபா விநாதை விடுதில.." அசோக் சொல்லி முடிக்கும் முன்பே, அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டு வைத்தாள் மீரா.

"ஆஹ்ஹ்ஹ்....!!!!" அசோக் வலி தாங்காமல் தலையை தேய்த்துக் கொண்டான்.

"த்தூ.. இத்தனை வயசாச்சு.. இன்னும் பேச கத்துக்கல நீ..!! ஒரு நாலுவரி.. அதை மனப்பாடம் பண்ண வக்கு இல்ல..??"

"ஷ்ஷ்ஷ்.. ஸாரி மீரா.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு.. இரு.. திரும்ப சொல்றேன்..!!"

"ம்ம்.. சீக்கிரம்..!! டைம் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு..!!"

"கு..குட் மார்னிங்.. நா..நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்.. எங்க விடுதி சார்பா ஒரு பெரிய இசை நிகழ்ச்சி நடத்த நெனைச்சிருக்குறோம்.. எ..எங்க விடுதில இருக்குற மாற்று திறனாளிகளை மட்டும் வச்சே.. இந்த இசை நிகழ்ச்சியை நடத்தப் போறோம்.. ரொம்ப ரொம்ப வித்தியாசமான.. நீங்க கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி..!! அ..அதுக்கான என்ட்ரன்ஸ் டிக்கெட்தான் ஸார் இது.. ஒரு டிக்கெட்டோட விலை.. ஜஸ்ட் பிஃப்ட்டி ருபீஸ்தான்..!! இதை நீ வாங்கிகிட்டா.. உங்களோட ஒரு நாள் ஈவினிங்க சந்தோஷமா கழிச்ச மாதிரியும் இருக்கும்.. எங்க விடுதில இருக்குற நெறைய ஆதரவற்ற குழந்தைங்களுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும்..!! ப்ளீஸ் ஸார்.. உங்களோட உதவி எங்களுக்கு தேவை..!!" அசோக் தட்டுதடுமாறி சொல்லி முடிக்க,

"ஹ்ம்ம்... குட்..!! இந்தா.. இதுல நூறு டிக்கெட் இருக்கு.. நீ இந்தப்பக்கம் இருக்குற ஏரியாலாம் எடுத்துக்கோ.. நான் அந்தப்பக்கம்.. ஈவினிங் ஆறு மணிக்கு திரும்ப இதே எடத்துல மீட் பண்ணுவோம்.. சரியா..??"

"ம்ம்..!!"

"நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. ஆறு மணிக்குள்ள எல்லா டிக்கெட்டையும் வித்துட்டு.. ஐயாயிரம் ரூபா பணத்தோட வரணும்.. இல்லனா உன் பைக்கை காயலான் கடைல போட்டு காசை எடுத்துக்க வேண்டியதா இருக்கும்.. புரிஞ்சதா..??" மீரா பைக் சாவியை சுழற்றிக்கொண்டே சொன்னாள்.

"இ..இதுலாம் நல்லா இல்ல மீரா..!!" அசோக் பரிதாபமாக சொன்னான்.

"எதுலாம்..??"

"பார்க் பீச்னு சுத்தப் போறோம் நெனச்சுட்டு ஆசையா வந்தேன்.. இப்படி பாட்டுக்கச்சேரி டிக்கெட் விக்க சொல்றியே.. அதுவும் தெருத்தெருவா.. தனித்தனியா..!! அட்லீஸ்ட் சேர்ந்தாவது போகலாம்ல..??"

"நாம என்ன கொள்ளையடிக்கவா போறோம்.. சேர்ந்து போக சொல்ற..?? டொனேஷன் கேக்க போறோம்.. தனித்தனியா போனாத்தான் நெறைய பேரை மீட் பண்ணலாம்.. நெறைய பேரை மீட் பண்ணாத்தான் நெறைய டிக்கெட்டும் விக்க சான்ஸ் இருக்கு..!!"

"ப்ளீஸ் மீரா..!!"

"ப்ச்.. பைக் திரும்ப வேணுமா வேணாமா உனக்கு..??"

"வேணும்..!!

"அப்போ கெளம்பு..!!"

"நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல மீரா.. ஜாலியா ஊர் சுத்தலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. இப்படி என் பைக்கை வாங்கி வச்சுட்டு மெரட்றியே..?? நீ பண்றதுலாம் தப்புன்னு உனக்கு தோணல..??"

"இல்ல.. தப்பு இல்ல.. நாலு பேருக்கு நல்லது நடந்தா.. எதுவுமே தப்பில்ல..!!" மீரா 'நாயகன்' கமல் போல சொல்ல,

"அய்யயையைய்யயே...!!" என்று அசோக் 'காதல்' பரத் போல தலையில் அடித்துக் கொண்டான்.

அன்று முழுதும் அசோக் வீதி வீதியாக அலைந்து திரிந்தான்..!! அடையாறு ஏரியாவின் இண்டு இடுக்கு, சந்து பொந்தெல்லாம்.. தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டான்..!! ஒவ்வொரு டிக்கெட்டையும் விற்று தீர்ப்பதற்குள்.. அசோக்குக்கு.. தாவு தீர்ந்தது.. தவிடு தின்ன வேண்டி இருந்தது.. தழை கீழாக நின்று டகீலா அடிக்க நேர்ந்தது..!! இலவசம் என்றதும் 'ஈஈ' என இளிக்கிற மனித இனம்.. நன்கொடை என்றதும் நாயைப் போல பார்க்கிற நிதர்சனத்தை.. கண்கூடாக கண்டு கொண்டான்..!!

"இல்லைங்க.. எதுவும் வாங்கறது இல்ல..!!" என்ன ஏது என்று, நின்று கேட்க கூட நேரமின்றி, அசோக்கின் முகத்தில் கதவை அறைந்துவிட்டு, தியாகம் சீரியல் பார்க்க விரைந்தாள் ஒரு இல்லத்தரசி.

"என்க்கு டமில் வராது.. ஐ டோன்ட் நோ இங்க்லீஷ் டூ..!!" வாய் கூசாமல் பொய் சொன்னான் ஒரு நடுத்தர ஆசாமி.

"ச்சே.. லீவ் நாள் ஆனாலே கையில நோட்டு எடுத்துட்டு கெளம்பி வந்துடுறானுக..!!" அசோக்கின் முதுகுக்கு பின்னால் முணுமுணுத்த முறுக்கு மீசை பெரியவர், அவனை பிச்சைக்காரன் போலத்தான் பாவித்தார்.

அசோக் அவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் ஒவ்வொரு டிக்கெட்டாக விற்க வேண்டி இருந்தது. அடுத்தவர்களுடைய ஏளனப் பார்வை அவனுடைய தன்மானத்தை கிளறி விட்டாலும், மீரா மீதிருந்த காதலுக்காக பொறுத்துக் கொண்டான். ஆனால்.. அவனுடைய பொறுமையை ஒரு பேச்சிலர் பையன், மிக அதிகமாகவே சோதித்து விட்டான். 'விடுதியில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்.. என்னென்ன வசதிகள் இருக்கின்றன.. எப்படி எல்லாம் நிதி திரட்டுகிறார்கள்..' என்பது மாதிரி ஆயிரெத்தெட்டு கேள்விகள் கேட்டான். அசோக்கும் மீரா தந்த பிரவுசர் உதவியுடன் அவனுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு மேல் அசோக்கை கேள்வியால் துளைத்து எடுத்தவன், பிறகு

"ஸாரி பாஸ்.. ஆக்சுவலா நீங்க சொன்ன டேட்ல எனக்கு ஒரு முக்கியமான அப்பாயின்ட்மன்ட் இருக்கு.. இல்லனா கண்டிப்பா இந்த டிக்கெட் வாங்கிருப்பேன்..!! நீங்க ஒன்னு பண்ணுங்க.. நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் நீங்க நடத்தினா.. அப்போ வந்து என்னை மீட் பண்ணுங்க.. நான் கண்டிப்பா வாங்குறேன்.. ஓகேவா..??" என்று கூலாக சொல்லிவிட்டு பீர் டின் எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அசோக்கோ வெறியாகிப் போனான்.

"ஏண்டா.. நீ குடிக்கிற எம்பது ரூவா பீரு, இன்னும் அரை மணி நேரத்துல பாத்ரூம்ல மூத்திரமா போயிரும்.. ஆதரவு இல்லாத அநாதை புள்ளைங்களுக்கு, அம்பது ரூவா செலவழிக்க மாட்டியா நீ..??"

என்று அவனுடைய உச்சந்தலையிலே ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. தான் பிரதிநிதியாக வந்திருக்கிற அநாதை விடுதியின் பெயர் கெட்டுப் போகக் கூடாதே என்பதற்காக, பொறுமையாக எழுந்து வந்தான்.

ஆறுமணிக்கு அசோக்கும் மீராவும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். மீரா அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று முடித்திருந்தாள். அசோக்கின் கையில்தான் ஆயிரம் ரூபாய்க்கான டிக்கெட் மீதம் இருந்தது. ஆனால் மீரா அதற்காக அவனை திட்டவில்லை.

"குட் அசோக்.. யு ஹவ் டன் ரியல்லி எ க்ரேட் ஜாப்..!!" என்று மனதார பாராட்டினாள்.

"சரி.. மிச்ச டிக்கெட்லாம் குடு..!!" என்று மீரா கேட்டபோது, அசோக் தரவில்லை. மாறாக பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான்.

"இந்தா..!!"

"ஹேய்.. பரவால.. விக்க முடியலைன்றதுக்காக நீ பணம் தரவேண்டியது இல்ல.. அடுத்தவங்க வாங்கலன்னா அதுக்கு நீ என்ன பண்ணுவ..??"

"இல்ல மீரா.. இன்னைக்கு பூரா அலைஞ்சு திரிஞ்சதுல.. நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்..!!"

"என்ன..??"

"நல்லது செய்ங்கன்னு நாலு பேர்ட்ட உதவி கேக்குறதுக்கு முன்னாடி.. நாம அதுக்கு தகுதி உள்ளவங்களா இருக்கணும்..!! அதுக்காகத்தான் மிச்ச டிக்கெட்லாம் நானே வாங்கிக்கிறேன்னு சொல்றேன்.. என் ஃப்ரண்ட்ஸ், ஃபேமிலி எல்லாரும் கூட்டிட்டு நான் அந்த பங்க்ஷன்க்கு போக போறேன்..!! இந்தா.. பணத்தை வச்சுக்கோ..!!" அசோக் மீராவின் கையில் பணத்தை திணிக்க, அவள்

"ச்சோ.. ச்ச்வீட்..!!"

என்றாள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு. பணத்தை வாங்கி பேகில் மொத்தமாக வைத்தவள், உள்ளே இருந்து அந்த பொம்மையை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

"ம்ம்.."

"ஹேய்.. என்ன இது..??"

"ஆயிரம் ரூபா டிக்கெட்டை நீங்க ஒரே ஆளே மொத்தமா வாங்கினதால.. உங்களோட தாராள குணத்தை பாராட்டி.. எங்க விடுதி சார்பா நாங்க தர்ற ஒரு நினைவுப்பரிசு.. எங்க குழந்தைங்க தேங்கா நார்லயே செஞ்ச.. மூக்கு செவந்த கொரங்கு பொம்மை..!!"

"ஹாஹா.. இட்ஸ் க்யூட்..!!" அசோக் புன்னகையுடனே அந்த குரங்கு பொம்மையை கையில் வாங்கிக்கொண்டான்.

"சரி.. கெளம்பலாம்... அர்பனேஜ் போய் பணத்தை ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம்..!!"

"கெளம்பலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உன்கூட சேர்ந்து ஏதாவது சாப்பிடனும் மீரா..!!" அசோக் சற்றே ஏக்கமாக சொன்னான்.

"அவ்வளவுதான..?? சாப்பிட்டா போச்சு.. வா.. நான் உனக்கு ட்ரீட் தர்றேன்..!!" மீராவும் உற்சாகமாகவே சொன்னாள்.

அன்று அவளுடன் சேர்ந்து ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் குடித்த தேநீர், தேவாமிர்தமாய் தோன்றியது அசோக்கிற்கு..!!

மூன்றாம் நாளில் அசோக் புரிந்து கொண்டது: மீரா அப்படி ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியாத புதிர் அல்ல.


நாள் - 8

இடம்: ஃபுட்கோர்ட்

"ஹையோ.. ஸ்பூன் கீழ விழுந்துடுச்சு அசோக்.. கொஞ்சம் எடுத்து தர்றியா..??"

மீரா அவ்வாறு சொன்னதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் எழுந்தான். கீழே குனிந்து அமர்ந்தான். அந்த ஸ்பூனை பார்வையாலேயே தேடி, கையை வைக்கவும் மீரா தன் காலை நகர்த்தி அவன் கைக்கருகே வைக்கவும் சரியாக இருந்தது. இவனுடைய கை அவளுடைய காலை தொட,

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் மகனே.."

அசோக் தலையை நிமிர்த்தி பார்த்தான். மீரா தன் கைகள் இரண்டையும் உயர்த்தி அசோக்கை ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. அந்த அற்புதக் காட்சியை, தூரத்தில் இருந்த அசோக்கின் நண்பர்களும் கண்டுவிட்டனர்.

"ஹாஹா..!! அவ்ளோ பேர் இருக்குற பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ கால்ல விழுந்து கெஞ்சுற அளவுக்கு என்னடா மச்சி தப்பு பண்ணின நீ..??" ஆளாளுக்கு அசோக்கை கலாய்த்தனர்.

"ஹேய்.. அவ கால்லலாம் விழடா.. நம்புங்கடா..!!" அசோக் கதறியதை யாருமே பொருட்படுத்தவில்லை.


நாள் - 12

"எப்படி இருக்கு..?? நல்லா இருக்கா..?? பிடிச்சிருக்கா உனக்கு..??"

அசோக் தன் தலையை இப்படியும் அப்படியுமாய் திருப்பி, தன் காதுகளை மீராவிடம் ஆசையாக காட்டினான். அவனுடைய இரண்டு காதுகளிலும் சிவப்பு நிறத்தில் இரண்டு வளையங்கள்..!! 'ஹேய் அசோக்.. எனக்கு.. இந்த காதுல வளையம் போட்டுக்குற பசங்களலாம் ரொம்ப பிடிக்கும்.. நீயும் அந்த மாதிரி போட்டுக்குறியா..?" என்று அதற்கு முன்தினம்தான் மீரா அசோக்கிடம் சொல்லியிருந்தாள். அதன் விளைவுதான் இது..!! ஆனால் நேற்று அப்படி சொன்னவள், இன்று அசோக்கின் காதுகளை பார்த்ததும் குபீரென்று சிரித்துவிட்டாள்.

"ஹாஹாஹாஹா..!!!"

அசோக் எதுவும் புரியாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அவளோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அவனை பார்த்து கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.

"ஏ..ஏன் மீரா சிரிக்கிற..?? நல்லா இல்லையா..??" அசோக் பாவமாய் கேட்டான்.

"ரொம்ப கேவலமா இருக்கு..!! யாராவது ஏதாவது சொன்னா.. அப்படியே செஞ்சுடுவியா..?? உன் மூஞ்சிக்கு எது செட் ஆகும்னு உனக்கே தெரியாதா..?? ஹையோ ஹையோ..!! ஹாஹாஹாஹா..!!!" மீரா சிரித்துக்கொண்டே இருக்க, அசோக் அப்படியே நொந்து நூலாய் போனான்.

அசோக் புரிந்து கொண்டது: என்னை அசிங்கப்படுத்தி பார்ப்பதில் மீராவுக்கு ஏனோ ஒரு அலாதி ப்ரியம்.


நாள் - 16

இடம்: அதே ஃபுட்கோர்ட்

"ஹேய்.. வாங்கடா.. பயப்படாதிங்க..!! நீங்க நெனைக்கிற மாதிரி இல்லடா.. அவ ரொம்ப நல்லவ... உங்களை ஒன்னும் செய்ய மாட்டா... உங்களை பத்தி எல்லாம் நல்ல விதமா சொல்லி வச்சிருக்குறேன்.. உங்களை மீட் பண்ண அவ எவ்வளவு ஆசையா இருக்குறா தெரியுமா..? வாங்கடா.. வாங்க..!!"

தயங்கிய நண்பர்களை அசோக் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மீரா முன்பாக நிறுத்தினான். அவர்களும் அறுக்கப் போகிற ஆடு மாதிரி, மிரள மிரள விழித்துக் கொண்டே, நடுக்கத்துடன் அவள் முன் சென்று நின்றனர்.

"இ..இவங்கதான் என் ஃப்ரண்ட்ஸ் மீரா.. காலேஜ்ல எல்லாம் ஒரே க்ளாஸ்.. அப்போ இருந்தே நாங்க ரொம்ப க்ளோஸ்..!!" அசோக் ஆரம்பித்து வைக்க,

"ஹாய்.. ஐ'ம் கி..கிஷோர்..!!"

கிஷோர் ஒரு தயக்கத்துடனே கை நீட்டினான். மீரா முகமெல்லாம் பிரகாசமாய் சேரை விட்டு எழுந்தாள். கிஷோரின் கையைப் பற்றி குலுக்கிக் கொண்டே சொன்னாள்.

"ஹாய்.. நீங்கதான் கிஷோரா..?? அசோக் உங்களை பத்தி நெறைய சொல்லிருக்கான்..!! உங்களுக்கு ஃபோடாக்ராஃபில ரொம்ப இன்ரஸ்டாமே..??"

"ஹ்ம்ம்.. யெஸ்..!! அதெல்லாம் சொல்லிருக்கானா இவன்..??" கிஷோர் இளித்தான்.

"ம்ம்..!! காலேஜ் படிக்கிறப்போ.. லேடீஸ் ரெஸ்ட் ரூம் எப்படி இருக்கும்னு, போட்டோ எடுத்துட்டு வர்றதா ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டி.. உள்ள ஏறி குதிச்சு.. அங்க எதிர்பாராத விதமா உங்க பிரின்ஸிபால் மேடத்தை மீட் பண்ணி.. கைல கேமராவோட கையும் களவுமா மாட்டிக்கிட்டு.. காலேஜ் மொத்தமும் உங்க மூஞ்சில காறி துப்புச்சாமே..??"

மீரா சிரிப்புடனே சொல்ல, கிஷோரின் முகம் பட்டென இருண்டது. பக்கவாட்டில் திரும்பி அசோக்கை முறைத்தான். அவனோ பாக்யராஜ் மாதிரி ஒரு அசட்டு பாவனையை வெளிப்படுத்தினான்.

"எவ்வளவு கேவலப்பட்டாலும் பரவாலன்னு.. இன்னும் அந்த கேமராவை விடாம, கெட்டியா பிடிச்சிருக்கீங்க பாத்திங்களா..?? ரியல்லி யு ஆர் க்ரேட்..!!" என்ற மீரா, வேணுவிடம் திரும்பி,

"நீங்க..??" என்றாள்.

"ஐ'ம் வேணு..!!" கிஷோருக்கு நேர்ந்ததை பார்த்து வேணுவிடம் அல்ரெடி ஒரு உதறல்.

"ஓ.. நீங்கதானா அது..?? வாவ்.. என்ன ஒரு மனவலிமை ஸார் உங்களுக்கு..?? அப்படி ஒரு சூழ்நிலைல கூட... ச்ச.. சான்ஸே இல்ல..!!"

"நீ..நீங்க எதை பத்தி சொல்றீங்க..?? எ..எனக்கு புரியல..!!"

"அதான் ஸார்.. நீங்க கோவா டூர் போயிருந்தப்போ.. லேடீஸ் மசாஜ் பார்லர்னு நாக்கை தொங்கப் போட்டுட்டு போய்.. கடைசில அவங்க எல்லாத்தையும் உருவிட்டு, உங்களை ஜட்டியோட விட்டுட்டு போயிட்டாங்களே.. அந்த இன்ட்ரஸ்டிங் இன்சிடண்ட் பத்தி சொல்லிட்டு இருக்குறேன்..!!"

இப்போது வேணு திரும்பி அசோக்கை முறைத்தான். அவன் வேணுவிடம் பார்வையாலே 'ப்ளீஸ் மச்சி.. கொஞ்சம் பொறுத்துக்கோ..' என்பது மாதிரி கெஞ்சினான்.

"கோவால.. கொட்டுற பனில.. இடுப்புல வெறும் ஜட்டியோட.. அஞ்சு கிலோமீட்டர் நடந்தே, ஹோட்டல்க்கு திரும்ப வந்து சேர்ந்திங்களாமே..?? வரே வா.. என்ன ஒரு அஞ்சா நெஞ்சு ஸார் உங்களுக்கு.. அப்படியே புல்லரிக்குது எனக்கு..!!"

அடுத்து என்ன நேரப் போகிறது என்று, சாலமனுக்கு இப்போது புரிந்து போனது. நைசாக அங்கிருந்து நழுவ முயன்றான். அதை கவனித்துவிட்ட மீரா, அவசரமாய் அவனை அழைத்தாள்.

"ஹலோ.. மிஸ்டர் சாலமன்.. எங்க ஓடுறீங்க.. வாங்க இங்க ..!!"

"அ..அது எப்படி..?? எல்லார்ட்டயும் 'நீங்கதானா அது.. நீங்கதானா அது..'ன்னு கேட்டிங்க.. என்னை மட்டும் நான்தான் சாலமன்னு கரெக்டா கண்டுபுடிச்சுட்டிங்க..??"

"ஹலோ.. மிச்சம் இருக்குறது நீங்க மட்டுந்தான..?? நீங்க இவ்வளவு பெரிய அதிபுத்திசாலியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!!"

"ஆ..ஆமால்ல.. ஸாரி..!!"

"ஆனா.. நீங்க ஒரு பயங்கர தைரியசாலின்னு எனக்கு நல்லா தெரியும்.. அசோக் சொல்லிருக்கான்..!!"

"ஓ..!! இஸ் இட்..?? அப்டிலாம் அவன் சொல்லிருக்க சான்ஸ் இல்லையே..??" சாலமன் இளித்தான்.

"சொன்னானே..?? நல்லா தண்ணியடிச்சுட்டு.. ஃபுல் மப்புல.. போலீஸ் ஜீப்பை நிறுத்தி லிஃப்ட் கேட்டு.. கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கி, போலீஸ் ஸ்டேஷன் வரை போய்.. நைட் ஃபுல்லா தங்கி இருந்து நல்லா வாங்கிட்டு வந்தீங்களாமே..??"

சாலமன் இப்போது திரும்பி முறைப்பான் என்று அசோக் அல்ரெடி உணர்ந்திருந்தான். நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவன் போல, எங்கேயோ பார்வையை திருப்பிக் கொண்டான்.

"அதுலயும்.. போலீஸ் ஜீப்ல கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கிட்டு போனீங்க பாத்திங்களா.. அந்த பார்ட்தான் வெயிட்டு.. ச்ச.. என்னா கெத்து ஸார்..??"

அசோக் மீராவிடம் நண்பர்களை பற்றி நல்லவிதமாக சொன்னதற்காக, நண்பர்களும் அன்று ஆபீஸ் திரும்பியபிறகு அவனை நல்லவிதமாய் கவனித்தனர்.

"அண்ணா.. கதவை தெறங்கண்ணா.. எங்களுக்கு பயமா இருக்குண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!!"

என அசிஸ்டன்ட் பையன்கள் இருவரும், கதவை 'படார் படார்' என்று தட்டி அலறிக்கொண்டிருக்க, உள்ளே அசோக்கிற்கு அந்த மதிய நேரத்தில் மண்டல பூஜை நடந்து கொண்டிருந்தது.

அசோக் புரிந்து கொண்டது: இங்கே இருப்பதை அங்கே சொல்வது, இஞ்சூரியஸ் டூ ஹெல்த்.


நாள் - 21

அசோக்கும் மீராவும் ட்ரெயினில் சென்று கொண்டிருந்தார்கள். இருவரும் அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். மீராவுடைய தோளுடன் தனது தோள் அவ்வப்போது உரசுவதையும், அதில் எழுகிற புதுவித சுகத்தினையும், ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான் அசோக். அப்போதுதான் அவனுடைய கன்னத்தில் சப்பென்று அறை விழுந்தது. அறைந்தது வேறு யாருமல்ல.. மீராதான்..!!

"என்ன மீரா..??" கன்னத்தை தடவிக் கொண்டே அசோக் கேட்டான்.

"பெரியவங்க நிக்கிறாங்கள்ல..?? எந்திரிச்சு எடம் குடு..!!" மீரா சீற்றமாக சொன்னாள்.

அப்புறம் கிண்டி வரும் வரைக்கும், அந்த தாத்தா மீராவினருகில் அமர்ந்து கடலை போட்டுக்கொண்டே வர, இவன் கம்பியை பற்றியவாறே கடுப்புடன் அந்த காட்சியை பார்த்துக் கொண்டு வந்தான்.


நாள் - 23

போத்தீஸில் ஷாப்பிங்கையும்.. சரவணபவனில் சாப்பாட்டையும் முடித்துகொண்டு.. அசோக்கும் மீராவும் சௌத் உஸ்மான் சாலையில் நடை போட்டுக் கொண்டிருந்தனர்..!! அவர்களுக்கு சற்று முன்பாக.. தலையில் ஒரு பெரிய கூடையுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.. கர்ப்பிணி பெண் ஒருத்தி..!! மீராவின் கண்களில் அந்தப் பெண் பட்டதுதான் தாமதம்.. அவசரமாக அவளிடம் ஓடிச் சென்றாள்..!!

"அம்மா அம்மா.. இருங்க..!! நீங்க எங்க போகணும்..??"

"அதோ.. அந்த பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போகணும்மா..!!"

"ஓ.. சரி.. கொஞ்சம் கூடையை எறக்குங்க.. பஸ் ஸ்டாண்ட் வரை என் பாய் பிரண்ட் தூக்கிட்டு வரட்டும்..!!"

அவ்வளவுதான்..!! அப்புறம்..

"வியாபாரம்லாம் எப்படிமா போகுது..??"

"என்னத்த.. பைசாக்கு பிரயோஜனம் இல்ல.."

மீராவும் அந்த பெண்ணும் கதையடித்தவாறே முன்னால் நடக்க.. ஜீன்ஸ், டி-ஷர்ட், கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ் சகிதத்துடன்.. தலையில் கடலைக் கூடையோடு அசோக் அவர்களை பின் தொடர்ந்தான்..!!

அசோக் புரிந்து கொண்டது: அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.


நாள் - 27

அசோக்கும் மீராவும் அந்த பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். மீரா அசோக்கின் செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அசோக் அவளுடைய அருகாமை தந்த போதையில் திளைத்துக் கொண்டிருந்தான். அவள் தோள் மீது கைபோடலாம் என்று எண்ணியவன், மெல்ல தன் வலது கையை உயர்த்தினான். அப்போதுதான் மீரா சரக்கென எழுந்தாள். இவனை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென எங்கோ நடந்தாள். அசோக்கும் 'எங்கே செல்கிறாள் இவள்..?' என்று எதுவும் புரியாமல் அவளை பின் தொடர்ந்தான்.

சற்றே மறைவாக இருந்த அந்த புதரை அடைந்ததும் மீரா நின்றாள். மறைவுக்கு அந்தப்புறமாக ஒரு குட்டிப்பெண்ணை இறுக்கி அணைத்த நிலையில் இருந்தான், வாலிபன் ஒருவன்.

"ஏய்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற.. யார் இந்த பையன்..??"

மீரா அந்தப் பெண்ணை நன்றாக தெரிந்தவள் போல பேச ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் இவளை அடையாளம் தெரியாமல் திகைத்தார்கள்.


"உன் அப்பாவுக்கு இதுலாம் தெரியுமா..?? அவருக்கு கால் பண்ணி சொல்லவா..??"

என்றவாறு மீரா அசோக்குடைய செல்போனில் ஏதோ சில பட்டன்களை அழுத்த, இப்போது அந்தப்பையன் அவசரமாய் எழுந்தான். அங்கிருந்து ஓடிவிட முயன்றான். மீரா சுதாரித்துக் கொண்டு அந்தப் பையனை எட்டிப் பிடித்தாள். அவனுடைய கன்னத்திலேயே 'சப்.. சப்.. சப்..' என்று அறைய ஆரம்பித்தாள். நான்கைந்து அறை வாங்கியதுமே, அந்தப் பையன் மீராவின் பிடியில் இருந்து தப்பித்து, அந்த இடத்தை விட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். மீராவின் செய்கையை கண்டு அந்த குட்டிப்பெண் மட்டுமில்லாது, அசோக்குமே அதிர்ந்து போனான்.

"ஹலோ.. யார் நீங்க..?? உங்களை யார்னே எனக்கு தெரியாதே..??" அந்தப்பெண் மீராவிடம் சீற,

"நான் யார்ன்றது இருக்கட்டும்.. விழுந்தடிச்சு ஓடுறானே.. அவன் யாருடி..??" மீரா கேட்டுக்கொண்டே அந்தப்பெண்ணின் பேகை எடுத்து நோண்டினாள்.

"அ..அவர்.. அவர் என் பாய் ஃப்ரண்ட்..!!" சொல்லி முடிப்பதற்கு முன்பே அவளுடைய கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது.

"பத்தாவது படிக்கிறப்போவே பாய் ஃப்ரண்ட் கேக்குதா உனக்கு..??"

ரௌத்திரமாக மாறியிருந்த மீராவின் கையில் அந்த பெண்ணின் ஸ்கூல் ஐடி கார்ட். அந்த ஐடி கார்டில் இருந்த ஸ்கூல் போன் நம்பரையும், அந்தப் பெண்ணின் வீட்டு நம்பரையும் அசோக்கின் செல்போனில் ஸேவ் செய்து கொண்டாள் மீரா.

"அக்கா.. ப்ளீஸ்க்கா.. என் ஐடி கார்ட் குடுத்திடுங்கக்கா..!!" அவள் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

"இரு.. மொதல்ல உன் ஸ்கூலுக்கும், அப்பாவுக்கும் போன் பண்ணி சொல்லிட்டு.. அப்புறம் தர்றேன்..!!"

"ஐயோ.. வேணாம்க்கா.. உங்க கால்ல வேணா விழுறேன்.. அப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்ருவாரு..!! இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன்க்கா.. ப்ளீஸ்க்கா..!!"

இப்போது அவளுடைய கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்..!! மீரா அவளையே சில வினாடிகள் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்..

"படிக்கிற வயசுல ஏண்டி இந்த வேலைலாம் பண்ணிட்டு அலையுற..?? ஒரு போன் பண்றேன் சொன்னதும்.. எப்படி அலறியடிச்சுட்டு ஓடுறான் பாரு.. அவன்லாம் எங்கடி கடைசி வரை உன்கூட வர போறான்..?? மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!" என்று வெறுப்பாக சொன்னவள், ஐடி கார்டை அவள் முகத்தில் விட்டெறிந்தாள்.

அசோக் புரிந்து கொண்டது: தான் மட்டுமல்ல.. மீராவிடம் அறைபட நிறைய பேர் பிறந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.


நாள் - 33

"விடுடா.. பாத்துக்கலாம்.."

"இல்ல மாமு.. ஒரு தம்மாத்துண்டு டாமாக்கோழி அவன்.. நம்மையே டபாய்ச்சுட்டு இருக்கான்..!! போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டா.. எஸ்கேப் ஆயிடலாம்னு பாக்குறானா அவன்..?? த்தா.. அவனை கண்டுபுடிச்சு அவன் மெயினை ஸ்விட்ச் ஆப் பண்றனா இல்லையான்னு பாரு..!!"

KFC உணவகத்தில் மீராவுக்கு தீனி வாங்கிப்போட வந்திருந்த அசோக், அருகில் கேட்ட பேச்சு சப்தத்திற்கு திரும்பி பார்த்தான். பார்த்ததுமே குலை நடுங்கிப் போனான். அவர்கள்.. அன்று டாட்டோ சுமோவில் பார்த்த அதே தாடி மீசைகள்.. கரடு முரடான காட்டுப் பயல்கள்.. கையில் கத்தியும், மனதில் கொலை வெறியுமாய் அலைபவர்கள்..!!

"ரொம்ப பீல் பண்ணாதடா.. எங்க போயிறப் போறான்.. பாத்துக்கலாம் விடு.."

"என்னால அப்படி இருக்க முடியல மாமு.. அப்டியே நெஞ்செல்லாம் திகுதிகுன்னு எரியுது எனக்கு..!! இப்போ சொல்லிக்கிறேன் கேட்டுக்கோ.. த்தா.. அவனை போட்டுட்டு.. அதுக்கப்புறந்தான் என் பொண்டாட்டியை.." அவன் வீராவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"டேய்ய்ய்.." என்று மற்றவர்கள் அவசரமாய் கத்தினர். உடனே அவன் அப்போது லோ வாய்ஸில்..

"ஊர்ல இருந்து கூட்டிட்டு வரணும்னு சொன்னேன் மாமு..!! ஒரு பொடிப்பயலை போடத் துப்பு இல்ல.. உனக்குலாம் எதுக்கு பொண்டாட்டின்னு.. கோச்சுக்கிட்டு அப்பன் வூட்டுக்கு போயிட்டா மாமு அவ..!!" என்றான். அப்புறந்தான் மற்றவர்கள் 'ஷ்ஷ்ஷபாஆஆ..' என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

"ஹேய்.. மீரா.. வா கெளம்பலாம்.." அசோக் மீராவிடம் கிசுகிசுப்பாக சொன்னான்.

"இரு.. இன்னும் ஒரு பீஸ்தான்..!!"

"ப்ச்.. வான்னு சொல்றேன்ல..??"

வறுத்த சிக்கனை கவ்விய வாயுடனே, மீராவை வலுக்கட்டாயமாக எழுப்பி இழுத்து சென்றான் அசோக். வாசலுக்கு சென்றதும், அசோக்கின் கையை உதறினாள் மீரா. சிக்கனை அசை போட்டுக்கொண்டே கேட்டாள்.

"வாட்ஸ் ராங் வித் யூ..?? எதுக்கு இப்படி அவசரமா இழுத்துட்டு போற..??"

"மீரா.. நா..நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! அதோ.. அங்க உக்காந்திருக்கானுகள்ல.."

"எங்க..??"

"நாம உக்காந்திருந்ததுக்கு பின்னாடி டேபிள்.. தடித்தடியா நாலு பேரு..!!"

"ம்ம்.. யார் அவங்க..??"

"அன்னைக்கு உன்கிட்ட சொன்னேன்ல.. என்னை போட்டு தள்றதுக்காக.. டாட்டா சுமோல அலைஞ்சுட்டு இருக்கானுகனு.. அவனுகதான் அது..!!"

"ஓ.. இவனுகதானா..??"

"வா.. கெளம்பிடலாம்.. இங்க நிக்கிற ஒவ்வொரு செகண்டும் ஆபத்து..!!" அசோக் பதற்றமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"ஹாய்.. மிஸ்டர் மஞ்ச சட்டை.." என்று அந்த ரவுடி ராஜாக்களை பார்த்து மீரா கத்தினாள்.

"ஏய்.. என்ன பண்ற நீ..??" அசோக் மிரண்டு போய் அலறியதை அவள் பொருட்படுத்தவில்லை.

"ஹலோ உங்களதான் ஸார்.. வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி உக்காந்திருக்கிங்களே.. நீங்கதான்..!! நீங்க தேடிட்டு இருக்குற ஆளு இவன்தான்.. வாங்க வாங்க.. ஓடிறப் போறான்.. வந்து புடிச்சுக்கோங்க.."

அவள் அவ்வாறு கத்தியது தங்களைப் பார்த்துதான் என்பதை தாமதமாக உணர்ந்துகொண்டு.. அந்த நால்வரும் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் வாசலை திரும்பி பார்த்தபோது.. அசோக் ஸ்டெப்ஸ் எல்லாம் தவ்விக்குதித்து.. ட்ராஃபிக் எல்லாம் தாண்டிப்பறந்து.. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று.. அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தான்..!!

அசோக் புரிந்து கொண்டது: மீரா ஒரு சென்ஸ்லஸ் **சென்ஸார்ட் பை ஸ்க்ரூட்ரைவர்**


நாள் - 37

அசோக்கும் மீராவும் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த மல்டிப்லக்ஸ் வாசலில் நின்றிருந்தனர்.

"தலைவர் படம் பாக்கலாம் மீரா.. சரியா..??"

"சொல்றேன்ல.. தனுஷ் படத்துக்கு போலாம்..!!"

"ப்ளீஸ் மீரா.. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. இந்த ஒருதடவை எனக்காக.. ப்ளீஸ்..!!" அசோக் கெஞ்சலாகத்தான் சொன்னான். அதற்கே மீராவுக்கு சுருக்கென்று கோவம் வந்தது.

"ஓ.. அப்போ.. நான் சொல்றத கேட்க மாட்டேல..?? உனக்கு உன் விருப்பம் மட்டுந்தான் முக்கியம்.. அடுத்தவங்க விருப்பத்தை பத்தி எந்த அக்கறையும் இல்ல.. அப்படித்தான..??" என்று சீறினாள்.

அப்புறம்.. இருவரும் தனுஷ் படத்தைத்தான்.. ஒருவருக்கொருவர் பேசாமல் முறைத்துக் கொண்டே.. முழுவதும் பார்த்து முடித்து வெளியே வந்தார்கள்..!!


நாள் - 39

"என்ன சாப்பிடுற..??" மீரா மெனுகார்ட் புரட்டிக்கொண்டே கேட்டாள்.

"உனக்கு புடிச்சதை ஆர்டர் பண்ணு மீரா.. எனக்கு எதுனாலும் ஓகே..!!"

இரண்டு நாட்கள் முன்பு தியேட்டரில் கிடைத்த அனுபவத்தால் அசோக் இப்போது உஷாராக சொன்னான். ஆனால்.. மீரா இன்று என்ன நினைத்தாளோ..?? மெனு கார்டை மூடி வைத்துவிட்டு, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள்.

"எ..என்னாச்சு மீரா..??" அசோக் பதற்றமாக கேட்டான்.

"எதுனாலும் ஓகேன்னா.. அரை கிலோ புண்ணாக்கு கொண்டு வர சொல்றேன் சாப்பிடுறியா..?? ஏன்.. உனக்குன்னு விருப்பு, வெறுப்பு, இன்டிவிசுவாலிட்டி.. எதுவும் இல்லையா..?? எல்லாத்தையும் தொலைச்சிட்டியா..??" மீரா படபடவென பொரிய, அசோக்குக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.

அசோக் புரிந்து கொண்டது: மீராவும் கழுதையும் ஒன்று. முன்னாடி போனால் கடிக்கிறாள். பின்னாடி போனால் உதைக்கிறாள்.


நாள் - 42

"ஹையோ.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. நான் ஒன்னும் கடைசி வரை இந்த சுடர்மணி பனியன் ஜட்டியோடவே நின்னுட போறது இல்ல..!! சினி இண்டஸ்ட்ரில நொழைய ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ஐ'ம் கோன்ன பி எ ஃபில்ம் மேக்கர் யு நோ..??"

"வாவ்.. ரியல்லி..??"

"எஸ்..!! அல்ரெடி மூணு ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடி.. யாராரை நடிக்க வைக்கிறது.. எங்கங்க ஷூட் பண்றது.. எல்லாமே டிஸைட் பண்ணிட்டேன்..!!"

"ம்ம்.. காசு போடுறதுக்குத்தான் எந்த லூசும் சிக்கலையாக்கும்..??"

"ஹிஹி.. ஆமாம்..!!"

"ஏன் அசோக்.. நீ டைரக்டர் ஆயிட்டா.. நீ சொன்ன பொண்ணைத்தான ஹீரோயினா போடுவாங்க..??"

"பின்ன..?? எல்லாமே என் டிசிஷன்தான்.. என்னோட சுதந்திரத்துல யாராவது தலையிட்டா.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!!"

"ஹேய்.. அப்போ ஏன் நீ என்னையே ஹீரோயினா போட கூடாது..?? எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமால நடிக்கனும்னு ரொம்ப ஆசை..!!"

"ஹ்ஹ.. ஹீரோயின்தான..?? போட்டுட்டா போச்சு..!! நீயும் அந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருப்பேன்னு எனக்கு தோணுது மீரா..!!"

"ஓ.. இஸ் இட்..?? என்ன மாதிரி ஸ்டோரி..??"

"ரொம்ப திகிலான பேய்க்கதை மீரா.. ஈவு இரக்கமே இல்லாத ஒரு பேய் பண்ற அட்டகாசம்தான் படம்..!!"

"ஹை இன்ட்ரஸ்டிங்..!! எனக்கு என்ன ரோல்..?? ஐ மீன்.. ஹீரோயின் என்ன பண்றா.. அந்தப்பேயோட அட்டகாசத்தை அடக்குறாளா..??"

"இல்ல.. அந்த பேய்தான் ஹீரோயினே..!!"

அசோக் அப்பாவியாக சொல்லிவிட்டு இளிக்க, மீரா அவனை எரித்து விடுவது போல முறைத்தாள். அப்புறம் அவனுடைய உச்சந்தலையிலேயே ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். அசோக் 'ஆஆஆஆ' என்று தலையை தேய்த்தவாறே அலறினான். அப்புறம் மீராவுக்கு தான் எழுதி வைத்திருக்கிற ஸ்க்ரிப்ட் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட மீரா, அசோக்கின் திறமை கண்டு நிஜமாகவே அதிசயித்துப் போனாள்.

"வாவ்..!! இம்ப்ரசிவ்..!! நல்ல டேலன்ட் உனக்கு..!!" என்று மனதார பாராட்டினாள். அசோக் குளிர்ந்து போனான்.

"தேங்க்ஸ் மீரா..!! ஆக்சுவலி எங்க வீட்ல ஆளாளுக்கு ஒரு டேலன்ட் இருக்கு தெரியுமா.. எனக்கு மூவி மேக்கிங்ல..!! அதுசரி.. உனக்கு இந்த மாதிரி ஏதாவது டேலன்ட் இருக்கா..??"

"ஏன் இல்லாம..?? நான் கவிதை சூப்பரா எழுதுவேன்..!!"

"ஓ.. இஸ் இட்..?? நீ எழுதுனதுல ஏதாவது கவிதை சொல்லு பார்ப்போம்..??"

"ஏற்கனவே எழுதுனது எதுக்கு.. உனக்காகவே ஸ்பெஷலா ஒன்னு எழுதி தர்றேன்..!!"

கூலாக சொன்ன மீரா, பேக்கில் இருந்து பேப்பரும் பேனாவும் எடுத்தாள். இமைகளை மூடி, நெற்றியை பேனாவால் தேய்த்தவாறே, ஏதோ யோசித்தாள். அசோக் அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் கூட ஆயிருக்காது. மீரா சரசரவென பேப்பரில் ஏதோ கிறுக்கினாள். கிறுக்கி முடித்து அசோக்கிடம் சரக்கென நீட்டினாள். அசோக் அதை அவசரமாக வாங்கி, ஆசையாக பார்த்தான்.

அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!

உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??

நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??

புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!


கவிதையை படித்துமுடித்த அசோக்கிற்கு, கடுகளவு கூட அதன் பொருள் புரியவில்லை. 'காதல் ரசம் சொட்ட சொட்ட ஏதோ எழுதி நீட்ட போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறாளே..?? ஆளவந்தானில் கமலஹாசன் 'சிற்பமான பெண்டிரென்று' என ஆரம்பிப்பாரே.. அந்த எஃபக்டில் இருக்கிறது..??' அர்த்தம் புரியாமல், அசோக் திருதிருவென விழிக்க..

"என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?? நல்லாருக்கா..??" மீரா ஆர்வமாக கேட்டாள்.

"ஹ்ம்ம்.. ந..நல்லா.. நல்லாருக்கு மீரா.. சூ..சூப்பர்.. பெண்டாஸ்டிக்..!!"

"தேங்க்ஸ்..!!"

"ஆனா.. கவிதைல எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மீரா..!!"

"என்ன..??"

"இல்ல.. நான் இந்த ஆவக்காய், கோவக்காய்லாம் கேள்விப் பட்ருக்கேன்.. அதென்ன காவக்காய்..??"

அசோக் கேட்டுவிட்டு அப்பாவியாக இளித்தான். மீரா இப்போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, அசோக்கையே கண்களை இடுக்கி முறைத்தாள். ஓரிரு வினாடிகள்..!! அப்புறம் அவனுடைய கன்னத்திலே 'சப்.. சப்.. சப்..' என்று அறைய ஆரம்பித்தாள்.

"ஹேய்.. மீரா.. ஐயோ... என்ன.. என்னாச்சு..??"

"அர்த்தமே புரியல.. நல்லாருக்குன்னு பீலா விடுறியா..?? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!"

அன்று மாலை.. அசோக் அந்த கவிதையை தன் நண்பர்களிடம் காட்டி.. பெருமைப் பட்டுக் கொண்டான்..!!

"ச்சே.. இந்த மீரா என்னமா கவிதை எழுதுறா மச்சி.. சான்சே இல்லடா.. அவளுக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்குறது.. இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சு பாரேன்..??"

"ஹ்ம்ம்.. இவ்வளவு பாராட்டுறியே..?? எங்க.. இந்த கவிதைக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லு..??"

கிஷோர் கடுப்புடன் கேட்க.. அசோக் மீண்டும் வசமாக சிக்கிக்கொண்டான்..!! 'ஹிஹிஹி..' என்று அசட்டுத்தனமாய் இளித்தான்.. 'கவிதை சொன்னா அனுபவிக்கனும்.. அர்த்தம்லாம் கேட்க கூடாது..' என்று சப்பைக்கட்டு கட்ட முயன்றான்..!! ஏற்கனவே அவன் ஒருமாதத்தில் இருபது முறைக்குமேல்.. காதல் உல்லாசம் படத்தை திருட்டுத்தனமாக பார்த்திருப்பதை அறிந்திருந்த நண்பர்கள்.. அன்று கற்பனையில் துப்பியது போல.. இன்று நிஜமாகவே துப்பினர்..!!

"த்தூ.. த்தூ.. த்தூ..!!!"

"இப்போ எங்கடா போச்சு உன் ஒரிஜினாலிட்டி.. என் வெளக்கெண்ணை..??" வேணுதான் ரொம்ப வேகமாக இருந்தான்.

அசோக் புரிந்து கொண்டது: மீரா எழுதிய கவிதையை படிக்க தமிழ் டூ தமிழ் டிக்சனரி தேவை.


நாள் - 44

"Sexy lady on the floor.. keep you coming back for more..!!"

தனது பெட்ரூமில் இருந்து செல்போன் அலற, சாப்பிட்டுக்கொண்டு இருந்த அசோக் பதறியடித்துக்கொண்டு, எழுந்து உள்ளே ஓடினான். அப்பா கையில் வைத்திருந்த புத்தகம் பறந்தது. அம்மா அடுக்கி வைத்த துணிமணிகள் சிதறின. அவன் தனது செல்போனில் மீராவுக்கென ஸ்பெஷலாக செட் செய்து வைத்திருக்கிற ரிங்டோன்தான் அது.. அவள் எப்போதாவதுதான் அசோக்கிற்கு கால் செய்வாள்.. அப்படி எப்போதாவது கால் செய்கிற போதெல்லாம்.. அசோக் இப்படித்தான் மாறி விடுவான்..!! பாரதிதான் அசோக்கின் முதுகைப் பார்த்து எரிச்சலாக கத்தினாள்..!!

"டேய்.. பொறுமையா போயேண்டா.. அப்படி என்ன அவசரம்..??"

"ஹையோ.. அவன் மெண்டல் ஆயிட்டான் மம்மி..!! அவன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கான்.. அது மூக்கை எனக்கு பாக்கவே சகிக்கல.. இவன் என்னடான்னா.. எந்த நேரம் பாத்தாலும் அதுக்கு மொச்சு மொச்சுன்னு முத்தம் குடுத்துட்டே உக்காந்திருக்கான்..!! உன் புள்ளைக்கு என்னவோ ஆயிடுச்சு..!!" சங்கீதா காதில் இருந்த ஹெட்போனை கழட்டிவிட்டு அம்மாவுக்கு சொன்னாள்.

ஆனால்.. இங்க நடப்பதை எல்லாம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல்.. அசோக் தனது பெட்ரூமில்.. கால் பிக்கப் செய்து..

"ஹலோ.. மீரா..!!" என்று இளிப்பாக சொன்னான், குருமா ஒட்டியிருந்த விரலை வாய்க்குள் வைத்து சுவைத்துக்கொண்டே..!!

நாள் - 47 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.
நாள் - 48 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.
நாள் - 49 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை.

அசோக் புரிந்து கொண்டது: ஸாரி.. சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை..!!

 

No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...