Social Icons

மலரே என்னிடம் மயங்காதே - 1








சற்றே எமோஷனலாக ஒரு காதலை சொல்ல திட்டமிட்டிருக்கிறேன். அதை தவிர இந்தக்கதையை பற்றி எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. காரணம்.. மேலும் தகவல்கள் சொன்னால்.. உங்களுடைய வாசிப்பு அனுபவம் கெட்டு விட கூடிய வாய்ப்பிருக்கிறது..!! குட்டி குட்டியாக ஐந்தாறு எபிசோட்கள் வருமாறு எழுத நினைத்திருக்கிறேன்..!! வழக்கம் போல உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்..!! நன்றி..!!

எபிஸோட் - I

குடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை செலுத்தினேன். நாங்கள் குடியிருக்கும் வீட்டை நெருங்கியதும் காரின் வேகத்தை சுத்தமாக குறைத்தேன். கேட்டுக்கு வெளியிலேயே காரை நிறுத்தி பார்க் செய்தேன். அலறிக்கொண்டிருந்த ஹிமேஷ் ரேஷம்மயாவை ஆஃப் செய்தேன். சாவி திருகி, இன்ஜினை சாந்தமாக்கினேன்.

கேட் திறந்து உள்ளே சென்று.. கயல்விழியை நான் கட்டிப் பிடித்து கொஞ்சுவதற்கு முன்பு.. என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நான்.. அசோக்..!! இயந்திரவியலில் இளநிலை பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவன். ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை, உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்யும் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம். உற்பத்தி பிரிவு ஒன்றுக்கு மேலாளராக இருக்கிறேன். சற்றே கடினமான வேலைதான்..!! மாதாமாதம் முதல் தேதி ஆனதும், எனது வங்கிக்கணக்கு ஐம்பதாயிரத்து சொச்சம் அதிகமாக காட்டும்.

மேலே நான் கொஞ்சப் போவதாக சொன்ன கயல்விழி, என் மனைவி..!! ஓராண்டுக்கு முன்புதான் எங்களுக்கு மணமானது..!! மாங்கல்யத்தை அவளுடைய கழுத்தில் பூட்டி.. என்னை அவளுடைய பதியாகவும்.. அவளை என்னில் பாதியாகவும்.. மாற்றிக்கொண்டேன்..!! இருவருக்கும் மணமாகிய இந்த ஒரு வருட காலத்தில், எங்கள் இருவருடைய மனமும்.. இப்போது ஒன்று கலந்து ஒரு மனமாகி போயிருந்தது..!! இல்லற வாழ்க்கை உமிழ்ந்த இன்பத்தில்.. நானும் கயலும் நனைந்து.. திளைத்துப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!! எங்கள் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம்.. மிக மிக அலாதியானது..!! சரி.. வாருங்கள்.. கயலை பார்க்கலாம்..!!

மலரே என்னிடம் மயங்காதே - 2










எபிஸோட் – II

சரியாக ஒரு வருடம் கழித்து..!!

அதிகாலை..!! இதமான குளிருக்கு கதகதப்பாய், இழுத்து மூட போர்வை தேடும் அதிகாலை..!! இமைகள் பிரிக்க, மிகவும் இன்னல் பட வேண்டிய அதிகாலை..!! மூன்றாம் வீட்டின் தாளிக்கும் வாசனை வந்து, மூக்கை துளைக்கிற அதிகாலை..!! காகத்தின் கரைச்சலோ, காரின் இரைச்சலோ, காதுக்கு எரிச்சலாய் தோன்றும் அதிகாலை..!!

நான் இப்போதெல்லாம் காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டில் தினமும் காலை டிபன், இட்லி அல்லது தோசைதான். அதற்கு தொட்டுக்கொள்ள தினமும் தேங்காய் சட்னிதான். சரியாய் ஏழு மணிக்கெல்லாம் பக்கத்து வீட்டு வனஜா மாமி, மிக்ஸியில் சட்னி அரைப்பாள். மிக்ஸியின் முரட்டு ப்ளேடுகளுக்குள் சிக்கி, தேங்காய் சில்லுகள் அரைபடும் கரகர ஒலி, காற்றில் மிதந்து வந்து என் காதுகளில் மோதும். அந்த மாதிரி ஒரு ஒலி செவிப்பறையில் விழ நேர்ந்தால், அவன் கும்பகர்ணனாய் இருந்தாலும், அதற்கு மேலும் தூங்குவது சாத்தியமில்லாத ஒன்று.

இன்றும் அப்படித்தான்..!! மிக்ஸி சத்தம் என் உறக்கத்தை கலைத்தது. இமைகளை பிரிக்கும் முன்பாக, நான் என் இடது கையை நகர்த்தி எதையோ தேடினேன். தேடியது சிக்கியதும் என் விழிகளை மெல்ல திறந்தேன். வெண்முத்து பற்கள் தெரியுமாறு, புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த கயல்விழி, காணக் கிடைத்தாள். கொஞ்ச நேரம் அவளது அழகு முகத்தை ஆசையாய் பருகியவன், பின்பு எனது விரல்களால் அவளது கன்னத்தை மெல்ல வருடினேன்.


மலரே என்னிடம் மயங்காதே - 3










எபிஸோட் - III

மனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் எனக்கும்..!! 'இப்படியே இருக்கப் போகிறாயா.. சோகத்திலிருந்து மீண்டு வா..' என என் அறிவு கிடந்து அலறினாலும், எனது மனம் கண்டு கொள்வதாயில்லை. கயலின் நினைவுகளை உதறவும் முயல்வதில்லை.

மலரும், பன்னீரும், அபியும்.. மனம் விட்டு சிரித்துக் கொண்டிருக்க.. எனக்குள்ளும் அந்த உற்சாகம் கொஞ்ச நேரம் உறைந்திருந்தது. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் அறைக்குள் நுழைந்தபோது, அத்தனை நேரம் காணாமல் போயிருந்த கயல்.. மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.. கனமாக..!! கயலின் முகம் காணவேண்டும் என்று எனது கண்கள் துடித்தன.. அவளது குரல் கேட்கவேண்டும் என்று காதுகள் தவித்தன..!! 'முகம் காண புகைப்படம் இருக்கிறது.. குரல் எப்படி..' என்கிறீர்களா..?? சொல்கிறேன்..!!

எனக்கும் கயலுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருந்த சமயம். பன்னீருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாய் ஒருநாள் கயலை சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்து மிரண்டவளை சமாதானம் செய்து, வெளியே கூட்டி சென்றேன். ஒரு ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டோம். அவள் கைகழுவ சென்ற கேப்பில்.. அவளது ஹேன்ட் பேக் திறந்து.. அவளுடைய செல்போனை எடுத்து.. எனது நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்து..!! அப்படித்தான் அவளுடைய செல்நம்பரை நான் அறிந்து கொண்டேன்..!!


மலரே என்னிடம் மயங்காதே - 4









எபிஸோட் – IV

ஏன் யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? ஏன் எல்லோருமே என் உணர்சிகளை சீண்டி விளையாடுகிறார்கள்..? காலம் பிரிக்கப் போவது தெரியாமல், கட்டிய மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்தது தவறா..? அந்த காதல் மனைவியை கோர விபத்தில் இழந்துவிட்டு, அவளுடைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேனே.. அது தவறா..? இந்த ஜென்மத்தில்.. இதய வீட்டில்.. அவளுக்கு மட்டுமே இடம் என்று வாழ முடிவு செய்ததில் ஏதேனும் தவறு கண்பீர்களா..? இதில் எது எனது தவறு..?? ஆனால்.. மலர், பன்னீர்.. அந்த முகுந்த் முதற்கொண்டு.. என் மீதுதான் ஏதோ தவறு என்பது போலல்லவா பேசுகிறார்கள்..??

கயல் என்னை விட்டுச்சென்ற இந்த ஒரு வருட காலத்தில், அவளுடைய நினைவுகளில் நான் வாழ்ந்திருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. அவளை தவிர என் வாழ்வில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்ற என் மனவுறுதியிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் என் மனவுறுதியை சற்றே ஆட்டம் காண வைத்திருக்கின்றன என்றே எனக்கு தோன்றிற்று. இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தேன். மலரிடம் பேச வேண்டும்..!!

அன்று மாலை ஆபீசில் இருந்து கிளம்பி பெசன்ட் நகர் பீச் சென்றேன். நிலவு வெளிச்சத்தில் கருநீலமாய் காட்சியளித்த கடலையே வெறித்து பார்த்தபடி, நெடு நேரம் அமர்ந்திருந்தேன். இருண்டுபோன கடற்கரை நோக்கி தவழ்ந்து வந்த வெள்ளி அலைகளையே, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனதுக்குள்ளும் அந்த மாதிரி எண்ணற்ற குழப்ப அலைகள்..!! திரும்ப திரும்ப.. சுழன்று சுழன்று.. மோதி மோதி.. என் அமைதியை அபகரித்துக்கொண்ட குழப்ப அலைகள்..!!

மலரே என்னிடம் மயங்காதே - 5








எபிஸோட் – V

அன்று இரவு நடந்தவை எல்லாம் அரைகுறையாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மூளை ஏடுகளில் பதிந்து போயிருக்கும் விஷயங்களை முடிந்த அளவு சேகரித்து சொல்கிறேன். எனக்கு சுய நினைவு வருவதும், பின் நினைவு தப்பி மயக்கமுறுவதும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன. கண் மூடினால் கயலின் புன்னகை முகமும், கண் விழித்தால் மலரின் கண்ணீர் முகமுமே, திரும்ப திரும்ப விழித்திரையில் விழுந்து கொண்டிருந்தன. குழப்பமான கனவுகள் வேறு இடை இடையே..!!

டாக்டர் எழுதி தந்த மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு ஷ்யாம் அவசரமாக ஓடியது ஞாபகம் இருக்கிறது..!! 'கொஞ்சம் வலிக்கும்.. பொறுத்துக்கங்க..' என்று கையுறை மாட்டிக்கொண்டே ஒரு நர்ஸ் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது..!! 'என்னைக்கும் என்கூடதானடா வருவ..? இன்னைக்கு மட்டும் ஏண்டா தனியா போன..?' என்று பன்னீர் அழுகையின் இடையே அரற்றியது கனவில்லை என்று நினைக்கிறேன்..!! 'எனக்கு எதுவும் வேணாம் ஷ்யாம்.. நீங்க சாப்பிட்டு வாங்க..' என்று மலர் மூக்கை விசும்பிக்கொண்டே சொன்னது, நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தது..!! அபி அர்த்த ராத்திரியில் 'வீல்....' என அலறி, அசந்து தூங்கிய என்னை விழிக்க வைத்ததும் மறந்து போகவில்லை..!!

விழித்துக்கொண்டதும்.. உடலெங்கும் ஏறியிருந்த வலியின் தீவிரம் உணர்ந்தேன். வலி தந்த வேதனையில் உழன்றேன். சுயநினைவு முழுமையாய் திரும்பாமல்.. சுவாதீனமும் இல்லாமல்.. கனவில் கண்ட பிம்பங்களின் தாக்கத்தில்.. 'கயல்.. மலர்.. அபி..' என மாறி மாறி ஏதோ பேரை சொல்லி.. புலம்பினேன்..!! தரையில் டவல் விரித்து படுத்திருந்த பன்னீருக்கு என் புலம்பல் ஒலி கேட்கவில்லை..!! சேரில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர், தன் உதடுகளை கடித்து முயன்றும் அடங்காமல், அவள் கண்களில் நீர் வெளிப்பட்டு கொட்டின..!!

நான் படும் வேதனையை நெடுநேரம் காண சகியாத மலர், அபியை தூக்கிக்கொண்டு வெளியே எழுந்து ஓடினாள்..!! வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வெளிர் நீல உடை அணிந்த நர்ஸுடன் வந்து சேர்ந்தாள்..!! அந்த நர்ஸ் வலி நீக்கும் மருந்தை.. ஊசியை செருகி.. என் உடலுக்குள் செலுத்த.. ஓரிரு நிமிடங்களியே நான் நிம்மதியாய் உறங்கிப் போனேன்..!! ஆழ்ந்த உறக்கம்..!!



மலரே என்னிடம் மயங்காதே - 6









எபிஸோட் – VI

மனதில் இருப்பதை வெளிப்படையாய் சொல்லவே ஒரு மாபெரும் தைரியம் தேவை. உணர்சிகளை கக்க தெரியாத இதயமே, உச்சபட்ச அழுத்தத்தில் சிக்கும். என் மனதில் உள்ளவற்றை மலரிடம் துணிச்சலாக சொல்லிவிட்டேன். அது அவளுக்கு எந்த மாதிரி உணர்வை கொடுத்திருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் என் மனதை திறந்து காட்டியதில், நான் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். 'என் மனதில் என்ன இருக்கிறது என்பதை இப்போது அவளும் அறிவாள்' என்ற எண்ணமே, எனக்குள் ஒரு அமைதியை ஏற்படுத்தியிருந்தது.

என் மனதில் இருந்ததை தெரிந்து கொண்டது, மலருக்கும் ஒருவகையில் நிம்மதியாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த நாள் காலையில் அவளை பார்த்தபோது, அவளுடைய முகம் பளிச்சென தெளிவாக இருந்தது. கடந்த சில நாட்களாக அவள் முகத்தில் குடியிருந்த சோகம், இப்போது காணாமல் போயிருந்தது. என்னைப் பார்த்ததும் அழகாக, இதமாக புன்னகைத்தாள். அவளுடைய பேச்சிலும் அத்தனை நாட்கள் இருந்த இறுக்கம் குறைந்து, இப்போது இயல்புக்கு வந்திருந்தது.

"நல்ல தூக்கம் போல..? எட்டு மணி போல வந்து பாத்தேன்.. அடிச்சு போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்தீங்க.. சத்தம் கொடுத்து பாக்கலாமான்னு நெனச்சேன்.. அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன்.." அபிக்கு டயாப்பர் மாட்டிவிட்டுக்கொண்டே, மலர் சொன்னாள்.

"நைட்டு.. கொ..கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு.."

"ம்ம்.. நீங்க பேசுனதிலேயே தெரிஞ்சது.."



அசோக் காலிங் அசோக் - 1





கொஞ்சம் SCI-FI, கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், நிறைய காமடியுடன் இந்தக்கதை இருக்கும். ரிமோட்டில் இருக்கும் ரீவைண்ட் பட்டன் போல, லைஃபுக்கும் ஒரு ரீவைண்ட் பட்டன் ஒருவனுக்கு கிடைத்தால்..??? அதை நகைச்சுவையாகவே சொல்ல முற்பட்டிருக்கிறேன். லாஜிக் என்பதை மருந்துக்கு கூட எதிர்பாராதீர்கள்..!! ஜாலியாக படித்துவிட்டு, உடனே மறந்து விடக் கூடிய ஒரு டைம் பாஸ் கதையாக இருக்கும்..!! நகைச்சுவை விரும்புவர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்..!! படித்து முடித்ததும் பிடித்திருக்கிறதா என்றும் எனக்கு சொல்லுங்கள்.. நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

எபிஸோட் - I

சூரியபகவான் டென்ஷனாகி கொதித்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்து நடுவானம் வரை நகர்ந்து வந்திருந்தவர், தன் உச்சபட்ச உக்கிரத்தை உலகிடம் காட்டிக் கொண்டிருந்தார். சித்ரலேகா (ஐந்து மாதமாக என் ஆசைக்காதலி) ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் (அவளது ஆசைக்காதலன் வீணாப்போன அசோக்) பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இரண்டு புறமும் பிடித்திருந்தேன். சித்ரலேகாவுக்கு சிறுத்த சிக்கென்ற இடுப்பு..!! ஆனால்.. இடுப்புத்தான் சிறுத்துப் போயிருக்குமே ஒழிய, முன்புறமும் பின்புறமும்… ம்ம்ம்ம்.. போங்க பாஸ்.. எனக்கு வெக்கமா இருக்கு..!!

அடித்த வெயிலுக்கு எனது உடம்பில் வியர்வை ஊறி கசகசத்தது. எனது வியர்வைதான் கசகசப்பாய் தோன்றியதே ஒழிய, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த லேகாவின் வியர்வை கவர்ச்சியாகவே என் கண்களுக்கு காட்சியளித்தது. சுடிதார் மறைக்காத அவளது முதுகில், முத்து முத்தாய் வியர்வை துளிகள் பூத்திருந்தன. சூரியக்கதிர்கள் அந்த வியர்வை முத்துக்களில் பட, வைரச் சிதறல்களாய் அவை மின்னின.

நான் என் முகத்தை அவளது முதுகுக்கு அருகில் எடுத்து சென்றேன். மூக்கை அந்த வியர்வை துளிகளுக்கு அருகில் வைத்து ஆழமாக சுவாசித்தேன். இவளுடைய வியர்வை கூட இவ்வளவு வாசமாயிருக்கிறதே என்று வியந்தேன். நான் அந்தமாதிரி வாசம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே, லேகா எரிச்சலாக சொன்னாள்.

"ப்ச்.. முதுகு அரிக்குதுன்னு இப்போ உன்கிட்ட சொன்னேனா..? சொறியுற..?"

"இல்ல.. எனக்கு மூக்கு அரிச்சுது லேகா.. அதான்.."

அசோக் காலிங் அசோக் - 2







எபிஸோட் – II

அந்த ஆள் எனக்கு பேச வாய்ப்பே தராமல் நெடுநேரம் 'ஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா..' என வெறி பிடித்தவன் மாதிரி சிரித்துக் கொண்டே இருந்தான். எனக்கோ தலையை சுற்றி ஸ்டார்ஸ் பறப்பது மாதிரி ஒரு உணர்வு..!!

கஸ்டமர் கேர்-இல் இருந்து ஹனி வாய்ஸில் ஒரு ஃபிகர் பேசி.. என் செல்போனுக்கு திறப்புவிழா நடத்தும் என்று எதிர்பார்த்திருந்தேன். இப்படி கழண்டுபோன கேஸ் ஒன்று கரகர வாய்ஸில் பேசி.. கழுத்தறுப்பு ஓப்பனிங் கொடுக்கும் என்று, கனவிலும் நான் நினைக்கவில்லை. எதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்.. டாக்டர்கள் தம்மடிக்கப்போன கேப்பில்.. நர்ஸின் செல்போனை திருடித்தான் இந்த ஆள் பேசுகிறான் என்று ஆரம்பத்தில் எனக்கு தோன்றியது. 

ஆனால் அதே நேரம்.. அந்த ஆள்தான் லூசு என்றாலும், என் செல்போனுக்கு என்னாயிற்று..? இது ஏன் பிசாசு பிடித்த பீஸ் போல பிஹேவ் செய்கிறது..? ஏர் டெல்லுக்கு பதிலாய் ஏதேதோ டெல் காட்டுகிறது..? நான் எதோ கன்னிப்பெண் மாதிரி பளிச் பளிச்சென என்னைப் பார்த்து கண்ணடிக்கிறது..? நடுராத்திரி நாய் மாதிரி ஊளையிட்டு கிலி கிளப்புகிறது..? என்ன இது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது..??

அசோக் காலிங் அசோக் - 3





எபிஸோட் – III

ஒரு ஃபிகரை உஷார் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? சொல்றேன்.. எல்லாம் கேட்டுக்குங்க..!! மொதல்ல டெயிலி குளிக்கணும்..!! காதலுக்கு கண்ணு வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா மூக்கு இருக்குது..!! அப்புறம் அந்த ஃபிகர் போற எடத்துக்குலாம் வோடஃபோன் நாய் மாதிரி பின்னாலேயே திரியணும்..!! அது அடிக்கிற மொக்கை ஜோக்குக்குலாம் வெக்கமே இல்லாம சிரிக்கணும்..!! பூ.. மழை.. கவிதை.. கழுதைன்னு அந்த ஃபிகருக்கு புடிச்சதுலாம் நமக்கும் புடிக்கும்னு மனசாட்சியே இல்லாம சொல்லணும்..!! முடிஞ்சா அந்த கழுதைல ரெண்டு.. ஸாரி.. கவிதைல ரெண்டு.. எழுதி நீட்டணும்..!! இன்னும் சொல்லிட்டே போகலாம்..!! மொத்தத்துல நாம ரொம்ப நல்லவன்ற மாதிரியே ஒரு ஸீன் போடணும்..!! ஒன்னு மட்டும் சொல்றேங்க.. நல்லவனா கூட இருந்திடலாம்.. ஆனா நல்லவன் மாதிரி ஸீன் போடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..!!

மேல நான் சொன்னதுலாம் ஒண்ணுக்காவாத சப்பை ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு..!! அந்த ஃபிகரு.. அட்டு பீஸா இல்லாம.. கொஞ்சம் அழகான பீஸா இருந்துட்டா.. அவ்வளவுதான்..!! அதை கரெக்ட் பண்ணி காதலிக்க வைக்கிறதை விட.. கர்நாடகாக்காரனை கரெக்ட் பண்ணி காவிரித்தண்ணியை வர வச்சுடலாம்..!! அவ்ளோ கஷ்டம்..!! நம்மோட சேர்ந்து இன்னும் பத்துப்பேரு.. டெயிலி காலைல எந்திரிச்சு குளிக்க ஆரம்பிச்சுடுவானுக..!! காப்பி அடிச்ச கவிதையை அந்த பீஸ்கிட்ட காட்டலாம்னு போனா.. நமக்கு முன்னாடியே நாலஞ்சு பேர் ஷோ ஓட்டிட்டு போயிருப்பானுக..!! ஹெவி காம்பட்டிஷனா இருக்கும்..!! எல்லாருக்கும் அல்வா கொடுத்து.. அந்த பீஸை நம்மைப் பாத்து 'ஐ லவ் யூ..!!' சொல்ல வைக்கிறதுக்குள்ள.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா.. தாவு தீந்துடும்..!!

அப்புறம்.. கரெக்ட் பண்ணின பீஸ் நம்ம கையை விட்டுப் போகாம பாத்துக்குறது இருக்கே.. அது இதெல்லாம் விட பெரிய கஷ்டம்..!! ஆனா.. அது இந்த கதைக்கு தேவையில்லாததால.. கரெக்ட் பண்ற கஷ்டத்தோட நிறுத்திக்குவோம்..!!

அசோக் காலிங் அசோக் - 4







எபிஸோட் - IV

"லேகா.."

"சொல்லு அசோக்.."

"இந்த சீனி தொல்லை தாங்க முடியலை லேகா.."

"என்னடா செல்லம் சொல்றான் அந்த ஆளு..?"

"உன்னை கழட்டி விட சொல்றான்டி செல்லம்.."

"ஹாஹா..!! ம்ம்ம்ம்.. நீ என்ன பண்ணப் போற..?"

"எனக்கு நீ வேணும் லேகா.. இந்த சீனியை ஏதாவது பண்ண முடியாதா..?"

"என்ன பண்ணலாம்..? இந்த மானிட்டரை தூக்கி அவன் மண்டைல போட்டுடலாமா..?" சொல்லிக்கொண்டே லேகா அருகில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை கையில் தூக்கினாள்.

"ம்ம்ம்... போட்டுடு லேகா.. ஒழிஞ்சு போகட்டும்.. இன்னொரு மானிட்டர் இருந்தா.. இந்த ஜானி மண்டைலயும் ஒன்னு போடு லேகா..!!" நான் சொன்னதும் லேகா அந்த மானிட்டரை மேலே உயர்த்தி என் தலையை குறி பார்த்தாள்.

"ஐயையோ.. என்ன லேகா.. என் மேல போட வர்ற..?" நான் பதறிப்போய் கேட்க, அவளுடைய முகம் இப்போது கோரமாய் மாறியது. இதழ்களின் இருபுறமும் இரண்டு பற்கள், வழியும் ரத்தத்துடன் வெளியே நீண்டன. பேய் மாதிரி சிரித்தாள்.

"ஹ்ஹஹாஹ்ஹஹா.... ஹ்ஹஹாஹ்ஹஹா.... சீனி தலைல போட்டா என்ன.. உன் தலைல போட்டா என்ன அசோக்.. ரெண்டு பேருமே ஒரே ஆளுதான..? உன் தலைலேயே போட்டுர்றேன்..!!"

அசோக் காலிங் அசோக் - 5









எபிஸோட் – V

சீனியர் குப்புற கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவர் ஏன் அப்படி அழவேண்டும் என்று எனக்கு சத்தியமாக விளங்கவில்லை. காதலியை கிஸ் அடிக்கையில்.. கையில் அகப்பட்ட அவளுடைய 'கழுக் மொழுக்' பாகம் ஒன்றைப் பிடித்து.. கசக்கிப் பார்த்துவிட்டேன்..!! இது ஒரு குற்றமா..? அதற்கு அவளே ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஆள் என்னவோ.. இவருக்கு எதையோ பிடித்து கசக்கி விட்ட மாதிரி.. இப்படி ஃபீல் பண்ணி அழுகிறாரே..?

"சீனி.. சீனி.. யோவ் சீனி.." கவிழ்ந்திருந்த சீனியரை நான் எழுப்பினேன்.

"என்னடா வெண்ணை..???" எழுந்து கேமராவை பார்த்து அவர் கத்தினார்.

"என்னது வெண்ணையா..? ஐயையோ.. என்னய்யா இதெல்லாம் நீ சொல்லி திட்ட ஆரம்பிச்சுட்ட..? இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற நீ..?"

"டென்ஷன் ஆகாம என்ன பண்றது..? எது நடக்கக் கூடாதுன்னு நான் நெனச்சேனோ.. அதையே.. எக்ஸாக்டா பண்ணிட்டு வந்திருக்குற..? நாய் மாதிரி போய் வாய் வச்ச.. சரி.. வாய் வச்சதோட வந்து தொலைச்சிருக்க வேண்டியதுதான..? வரும்போது எதுக்கு ஆட்டோக்காரன் மாதிரி ஹாரன் அடிச்சுட்டு வந்த..?"

"கை ஆட்டோமேடிக்கா அங்கே போயிருச்சுயா சீனி.."

"ஓஹோ..? கை ஆட்டோமேடிக்கா போயிருச்சு.. நீங்களா எதுவும் பண்ணலை.. அப்டியா..?? என்னைக்காவது பாடப் புத்தகத்தை தொடுறதுக்கு கை ஆட்டோமேடிக்கா போயிருக்கா..? இதுக்கு மட்டும் எப்படி போச்சு..??" அவர் எகிற, நான் இப்போது எரிச்சலானேன்.


அசோக் காலிங் அசோக் - 6











எபிஸோட் – VI

லேகாவை அந்த மாதிரி ஒரு செக்ஸி போஸில் நான் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால் எந்த பெண்ணையுமே பார்த்ததில்லை..!! பலான படங்களில் ஓரிரு முறை பார்த்ததோடு சரி..!! அவளது விழிகள் விஸ்கியில் ஊறியவை போல போதையேறிப் போயிருந்தன..!! அவளது இதழ்கள் 'இனிப்பு எடுத்துக்கொள்' என, எனது இதழ்களுக்கு இன்விடேஷன் விடுத்தன..!! அவளுடைய வாளிப்பான உடலின் வளைவு சுளிவுகள், இன்ஸ்டன்டாய் ஒரு காம ஊற்றை எனக்குள் சுரக்க செய்தன..!! படக்கென விழித்த என் ஆண்மையை அடக்க, படாதபாடு பட வேண்டியிருந்தது. திணறலான குரலில் அவளை அழைத்தேன்.

"லே..லேகா..!!"

"ம்ம்ம்..." அவள் புருவம் உயர்த்தி, போதையாய் சொன்னாள்.

"எ..என்ன இது.. என் ட்ரஸை எடுத்து போட்டிருக்க..?"

"ஹ்ஹா.. உன் ட்ரஸா..? இது போன மாசம் நான் உனக்கு எடுத்துக் கொடுத்த ட்ரஸ்.. ஞாபகம் வச்சுக்கோ..!!"

"அ..அதுக்காக..? அதை எதுக்கு இப்போ எடுத்து போட்டிருக்க..?"

"ஏன்.. போடக் கூடாதா..??" அவள் குறும்பாக கண் சிமிட்டியபடி கேட்டாள்.

"ம்ஹூம்.. இந்த ட்ரஸ் உனக்கு நல்லால்ல.. உன் சுடியையே எடுத்து மாட்டிக்கோ..!!"

"அது ஈரமா இருக்கு அசோக்..!! இதுதான் நல்லா கதகதப்பா.. நல்லா எ...தமா.. சூப்பரா இருக்கு.." சொன்னவள், என்னை ஆசையாக பார்த்தபடியே, அந்த சட்டையை இருகைகளாலும் அணைத்துக் கொண்டாள்.

"எதமா இருக்கா..? எனக்கு என்னன்னவோ மாதிரி இருக்கு.. இந்த ட்ரஸ்ல உன்னை பாக்குறதுக்கு..!! ப்ளீஸ் லேகா.. உன் ட்ரஸ் போட்டுக்கோ.. இதை கழட்டி போட்டுடு..!!"

"முடியாது..!!"

"ப்ளீஸ்..!!"

"ம்ஹூம்..!! வேணுன்னா நீயே வந்து கழட்டிக்கோ.. நீதான 'உன் ட்ரஸ்.. உன் ட்ரஸ்..'னு கெடந்து குதிக்கிற..? வா வா.. வந்து கழட்டிக்கோ..!! எனக்கு ஒன்னும் இல்ல..!!" அவள் சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் தடுமாறினேன்.



tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...