Social Icons

அன்புள்ள ராட்சசி - 1







'அன்புள்ள ராட்சசி' - நான் அடுத்து எழுத நெனைச்சிருக்குற கதை..!! ரொம்ப சிம்பிளான கதைதான்.. என்னோட எழுத்து மூலமா சுவாரசியமாக்க முடியும்ன்ற நம்பிக்கைல.. கைல எடுத்திருக்குறேன்..!! கதை தலைப்புலேயே ஓரளவு க்ளூ கொடுத்திருக்கேன்.. ஆரம்பத்துல சில ஜாலியான விஷயங்களும், போக போக சில காதல் உணர்வுகளையும் கதைல கலக்க நெனச்சிருக்கேன்..!! என்னோட எல்லா முயற்சிக்கும், அன்போட ஆதரவளிக்கும் நண்பர்கள்.. இந்தக்கதைக்கும் என்னோட துணை இருப்பாங்கன்னு நம்பி.. இந்த முயற்சில இறங்குறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்



அத்தியாயம் 1

"உ..உங்க பேரே மறந்து போச்சு..!!" பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

"அ..அசோக்..!!" அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

"ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??"

"ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!"

"வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??"

"இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!"

"ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??" அவர் சம்பிரதாயமாக கேட்க,

"இ..இல்ல ஸார்.. பரவால..!!" அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

"வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!" அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

"பரவால ஸார்.. இருக்கட்டும்..!!" அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

"ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் 'சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..'னு சொல்லிருந்தேன்..!!" அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

"ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!" அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

"பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!"

அன்புள்ள ராட்சசி - 2







அத்தியாயம் 3

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் 'ஆ'வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! 'யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??' என்று சாலமனின் ஆள் 'குண்டு' கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! 'இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..' என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!!

இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. 'ஹே.. பல்லே பல்லே பல்லே..' என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!!

"மச்சி வீடு வந்துடுச்சுடா..!!"

அன்புள்ள ராட்சசி - 3


 




அத்தியாயம் 4

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

"என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??"

"ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!"

"நல்லா தூக்கமா..??"

"செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!"

அன்புள்ள ராட்சசி - 4


 




அத்தியாயம் 6

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. 'பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்' தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

"என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!" என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

"மம்மீஈஈ..!!!!" அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

"அ..அசோக்கு... அசோக்கு... என்னப்பா ஆச்சு..??" பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

"ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!"

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

"எ..என்னடா நீ... இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!"

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, 'எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..' என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.

அன்புள்ள ராட்சசி - 5


 




அத்தியாயம் 8

அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! 'அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..' என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!

விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. 'கலக்கிட்டடா' என்று கன்னம் கிள்ளினர்..!!

தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!

"பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்... காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!"

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...