Social Icons

அன்புள்ள ராட்சசி - 13


 




அத்தியாயம் 22

வடபழனி NGO காலனி மெயின் ரோட்..!! வளர்ந்து அடர்ந்திருந்த பச்சை மரங்கள்.. வழிநெடுக தார்ச்சாலைக்கு குடைவிரித்திருந்தன..!! கிளைகளையும், இலைகளையும் ஊடுருவ முடியாத சூரியக்கதிர்கள்.. செறிவற்ற வெளிச்சத்தையே செல்கிற பாதையில் தெளித்திருந்தன..!! மத்தியில் வெண்ணிறப்பட்டை இழைக்கப்பட்ட கருஞ்சாலையின் தேகம் எங்கும்.. மஞ்சள் நிறத்திலான இலைதழைகள் மண்டிப்போய் கிடந்தன..!! சன்னமாய் புகை துப்பியவாறே அசோக்கின் பைக்.. சரக்கென அச்சாலையில் சீறியபோது.. பதறிப்போன மஞ்சள் இலைகள்.. பறந்து சிதறி.. பாதையில் இருந்து விலகி வழிவிட்டன..!!

வண்டியின் வேகத்தை அதிகம் குறைக்காமல்.. வலதுபுறம் செல்கிற சாலையில் அசோக் திரும்பினான்..!! எதிர்பாராத விதமாய் ஒரு ஆட்டோ.. எதிர்ப்புறம் இருந்து வெளிப்படவும்.. ஷகிரா இடுப்பசைப்பது மாதிரியான ஒரு லாவகத்துடன்.. பைக்கை நெளித்து சுளித்து வளைத்து.. ஆட்டோவின் மூக்குரசி முத்தமிடுவதை இறுதி நொடியில் தவிர்த்தான்..!! சடனாக பிரேக்கிட்ட ஆட்டோ ட்ரைவர்.. சத்தமாய் உதிர்த்த கெட்ட வார்த்தை.. காற்றோடு கலந்து காதில் விழுவதற்குள்.. காத தூரம் பறந்திருந்தான்..!!

அடுத்த இரண்டாம் நிமிடத்தில்.. அசோக்கின் பைக் அந்த தெருவுக்குள் நுழைந்தது..!! அப்படி நுழைந்ததுமே.. அந்த தெருவில் நிலவிய ஒருவித அமைதியை.. அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!!

அன்புள்ள ராட்சசி - 14


 




அத்தியாயம் 23

மனித மனதில் ஒரு மாற்றத்தை விதைப்பதென்பது.. மலையைக் குடைந்து பாதை அமைப்பதற்கு சமானம்..!! அந்த மனம் அத்தனை நாளாய் நம்பியிருந்த சித்தாந்தங்கள்.. எல்லாவித நிகழ்விற்குமான அந்த மனதின் எதிர்வினை சிந்தனைகள்.. இயல்பான அதன் அணுகுமுறைகள்.. இறுகிப்போன அதன் குணநலன்கள்.. இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிந்தால் மட்டுமே.. எந்தவொரு ஒரு மனிதனின் மனதையும் மாற்றிவிடுகிற சூத்திரம் மட்டுப்படக்கூடும்..!! சாத்தியமான காரியமே எனினும்.. சாதாரணமான காரியம் என இயலாது..!!

கடினமான அந்த காரியத்தை, மிக எளிதாக செய்து முடிக்கிற ஒன்று.. அண்டத்தில் உண்டெங்கில், அதனை அன்பென்றுதான் சொல்ல வேண்டும்..!! ஒரு உயிர் இன்னொரு உயிர் மீது கொண்ட உறுதியான அன்பென்பது.. உன்னதமானது மட்டுமல்ல.. சக்தி வாய்ந்தது.. வலிமை கொண்டது.. அளப்பரிய ஆற்றல் படைத்தது..!! அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!! அன்பு.. மனதை இளக, உருக செய்கிறது.. இறுக, உறைய வைக்கிறது.. மென்மையாக்குகிறது.. வன்மையாக்குகிறது.. மூர்க்கமாக்குகிறது.. சில சமயங்களில் முட்டாளாக்குகிறது..!! ஒரு வடிவத்தில் இருக்கிற மனதினை.. வேறொரு வடிவத்துக்கு சுலபமாக மாற்றுகிற பண்பு.. அன்பின் அனுகூலங்களில் ஒன்று..!!

'காதல் வீரனை கோழையாக்கும்.. கோழையை வீரனாக்கும்..' என்கிற பிரபலமான மேற்கோள் வாசகத்தில்.. காதல் என்ற சொல்லுக்கு பதிலாக, அன்பு என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்ராயம்.. நம்மூரில் காதல் என்கிற சொல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்தரங்க அன்பை மட்டுமே குறிக்கிற சொல்லாக இருப்பதாலேயே இதை சொல்கிறேன்..!! எந்தவகை அன்புக்குமே மனிதமனத்தை மாற்றிவிடுகிற வல்லமையுண்டு.. சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை விரட்டியவள் ஒரு தமிழ்த்தாய்தானே ஒழிய.. தமிழ்க்காதலி அல்ல..!!

அன்புள்ள ராட்சசி - 15


 




அத்தியாயம் 24

'கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..' என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??

அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??

காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??

அன்புள்ள ராட்சசி - 16


 




அத்தியாயம் 27

இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!

வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!

உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!

அன்புள்ள ராட்சசி - 17







அத்தியாயம் 30

காதலியின் புகைப்படத்தை கையில் ஏந்தியிருந்த அசோக்.. இதயத்தை ஆட்கொண்ட அந்த இன்ப அதிர்ச்சியில்.. சில வினாடிகள் சிலை போலவே உறைந்திருந்தான்..!! வெகுதூரம் ஓடிக்களைத்தவன் போல அவனுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது.. வெடவெடத்த விரல்களால் புகைப்படத்தை பற்ற கடினமாயிருந்தது..!! உடலெல்லாம் ஜிலீரென்று ஒரு சிலிர்ப்பு.. உள்ளமெல்லாம் ஜிவ்வென்று ஒரு பூரிப்பு..!! சில வினாடிகள்தான்.. உடனடியாய் அவனை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது..!!

"மம்மிஈஈஈஈ..!!" என்று கத்திக்கொண்டே உள்ளறைக்கு ஓடினான்.

"என்னடா..??" பாரதி கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

"மீ..மீரா.. மீரா மம்மி..!!" நடுநடுங்கிய கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டினான்.

"மீ..மீராவா..??" புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்த பாரதிக்கு எதுவும் புரியவில்லை.

"இ..இந்த ஃபோட்டோ.. இ..இது.. இது மீரா மம்மி.. இ..இது.. எ..என் மீராதான்.. ச..சந்தேகமே இல்ல..!!" உள்ளத்தில் இருந்த தவிப்பில் உதடுகள் படபடக்க, வார்த்தைகள் தெளிவாக வெளிவர மறுத்தன.

"ஓ..!! இ..இது.. இது எப்படி..??" பாரதி சந்தோஷமும், குழப்பமுமாய் மகனை ஏறிட்டாள்.

"நா..நான்.. நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல.. அ..அந்தப்பொண்ணு.."

"எந்தப்பொண்ணு..??"

"அ..அதான் மம்மி.. அந்த மும்தாஜ்.. எ..எனக்கு யோகா சொல்லி தந்த பொண்ணு..!!"

"ஆமாம்..!!"

"அ..அந்தப்பொண்ணுதான்.. அ..அவ... அவங்க.. படிக்கிறதுக்கு எனக்கு ஒரு புக் தந்தாங்க மம்மி.. அ..அந்த புக்குக்குள்ளதான் இந்த ஃபோட்டோ இருந்தது..!!"

"அ..அப்படினா..??"

"ஆமாம் மம்மி..!!! அ..அந்த மும்தாஜ்க்கு மீரா பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அவங்கட்ட விசாரிச்சா மீராவை எப்டியாவது கண்டுபுடிச்சுடலாம்..!! யெஸ்.. யெஸ்.. யெஸ்..!!!!"

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...