'அன்புள்ள ராட்சசி' - நான் அடுத்து எழுத நெனைச்சிருக்குற கதை..!! ரொம்ப சிம்பிளான கதைதான்.. என்னோட எழுத்து மூலமா சுவாரசியமாக்க முடியும்ன்ற நம்பிக்கைல.. கைல எடுத்திருக்குறேன்..!! கதை தலைப்புலேயே ஓரளவு க்ளூ கொடுத்திருக்கேன்.. ஆரம்பத்துல சில ஜாலியான விஷயங்களும், போக போக சில காதல் உணர்வுகளையும் கதைல கலக்க நெனச்சிருக்கேன்..!! என்னோட எல்லா முயற்சிக்கும், அன்போட ஆதரவளிக்கும் நண்பர்கள்.. இந்தக்கதைக்கும் என்னோட துணை இருப்பாங்கன்னு நம்பி.. இந்த முயற்சில இறங்குறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்
அத்தியாயம் 1
"உ..உங்க பேரே மறந்து போச்சு..!!" பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.
"அ..அசோக்..!!" அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.
"ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??"
"ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!"
"வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??"
"இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!"
"ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??" அவர் சம்பிரதாயமாக கேட்க,
"இ..இல்ல ஸார்.. பரவால..!!" அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.
"வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!" அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.
"பரவால ஸார்.. இருக்கட்டும்..!!" அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.
"ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் 'சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..'னு சொல்லிருந்தேன்..!!" அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,
"ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!" அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.
"பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!"