Social Icons

அசோக் காலிங் அசோக் - 3





எபிஸோட் – III

ஒரு ஃபிகரை உஷார் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? சொல்றேன்.. எல்லாம் கேட்டுக்குங்க..!! மொதல்ல டெயிலி குளிக்கணும்..!! காதலுக்கு கண்ணு வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா மூக்கு இருக்குது..!! அப்புறம் அந்த ஃபிகர் போற எடத்துக்குலாம் வோடஃபோன் நாய் மாதிரி பின்னாலேயே திரியணும்..!! அது அடிக்கிற மொக்கை ஜோக்குக்குலாம் வெக்கமே இல்லாம சிரிக்கணும்..!! பூ.. மழை.. கவிதை.. கழுதைன்னு அந்த ஃபிகருக்கு புடிச்சதுலாம் நமக்கும் புடிக்கும்னு மனசாட்சியே இல்லாம சொல்லணும்..!! முடிஞ்சா அந்த கழுதைல ரெண்டு.. ஸாரி.. கவிதைல ரெண்டு.. எழுதி நீட்டணும்..!! இன்னும் சொல்லிட்டே போகலாம்..!! மொத்தத்துல நாம ரொம்ப நல்லவன்ற மாதிரியே ஒரு ஸீன் போடணும்..!! ஒன்னு மட்டும் சொல்றேங்க.. நல்லவனா கூட இருந்திடலாம்.. ஆனா நல்லவன் மாதிரி ஸீன் போடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..!!

மேல நான் சொன்னதுலாம் ஒண்ணுக்காவாத சப்பை ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு..!! அந்த ஃபிகரு.. அட்டு பீஸா இல்லாம.. கொஞ்சம் அழகான பீஸா இருந்துட்டா.. அவ்வளவுதான்..!! அதை கரெக்ட் பண்ணி காதலிக்க வைக்கிறதை விட.. கர்நாடகாக்காரனை கரெக்ட் பண்ணி காவிரித்தண்ணியை வர வச்சுடலாம்..!! அவ்ளோ கஷ்டம்..!! நம்மோட சேர்ந்து இன்னும் பத்துப்பேரு.. டெயிலி காலைல எந்திரிச்சு குளிக்க ஆரம்பிச்சுடுவானுக..!! காப்பி அடிச்ச கவிதையை அந்த பீஸ்கிட்ட காட்டலாம்னு போனா.. நமக்கு முன்னாடியே நாலஞ்சு பேர் ஷோ ஓட்டிட்டு போயிருப்பானுக..!! ஹெவி காம்பட்டிஷனா இருக்கும்..!! எல்லாருக்கும் அல்வா கொடுத்து.. அந்த பீஸை நம்மைப் பாத்து 'ஐ லவ் யூ..!!' சொல்ல வைக்கிறதுக்குள்ள.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா.. தாவு தீந்துடும்..!!

அப்புறம்.. கரெக்ட் பண்ணின பீஸ் நம்ம கையை விட்டுப் போகாம பாத்துக்குறது இருக்கே.. அது இதெல்லாம் விட பெரிய கஷ்டம்..!! ஆனா.. அது இந்த கதைக்கு தேவையில்லாததால.. கரெக்ட் பண்ற கஷ்டத்தோட நிறுத்திக்குவோம்..!!

என்னை காதலிக்கும் ஒரு ஜீவன் ஆக லேகா எனக்கு கிடைத்ததே எனக்கு அளவிலா சந்தோஷம்..!! அதிலும் அவள் தேவலோக அழகி (அவங்க பேரு ரம்பாவோ.. நமீதாவோல..?) ரேஞ்சுக்கு அம்சமாக இருந்தது எனக்கு டபுள் சந்தோஷம்..!! செருப்பு முதல் செல்போன் வரை அவளே எனக்கு செலவு செய்வது ட்ரிப்பில் சந்தோஷம்..!! அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாக குழி தோண்டிப் புதைப்பது மாதிரி 'லேகாவை கழட்டி விடவேண்டும்' என்று அந்த ஆள் சொன்னது எனக்கு பயங்கர எரிச்சலை கிளப்பி விட்டது. அந்த எரிச்சலை அடக்க முடியாமலே கேட்டேன்.

"என்ன சீனியர்.. வெளையாடுறியா..?"

"வெளையாடுறனா..? சீரியஸா சொல்றேன் ஜூனியர்.. லேகாவை கழட்டி விட்டுடு.."

"யோவ்.. போய்யா..!! ரொம்ப கூலா வந்து அவளை கழட்டி விடுன்னு சொல்ற..? அதுலாம் முடியாது.. அவளை கரெக்ட் பண்றதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா..?"

"ஹாஹா..!! நீ என்ன கஷ்டப்பட்டேன்னு எனக்கு தெரியும் ஜூனியர்.. அந்த ஏழுமலையை எட்டி உதைச்சதை விட.. வேற என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டே..? அவளா வந்தா.. அவளா சிரிச்சா.. அவளா கைகொடுத்தா.. அவளா ஐ லவ் யூ சொன்னா..!! நீ என்ன பண்ணின..?"

"ம்ஹூம்.. அதுலாம் உன்கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது..!! நான் அவளை சின்சியரா லவ் பண்றேன்.. உன் பேச்சை கேட்டு அந்த லவ்வுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது..!!"

"ஜூனியர்.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.. உனக்கு நான் கெடுதல் நெனைப்பேனா..? உனக்கு கெடுதல் பண்ணினா.. அது எனக்கு நானே கெடுதல் பண்ணிக்கிற மாதிரி..!! நீதான் நான்றதை ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!!"

"இருந்துட்டு போ.. நீதான் நானா இருந்துட்டு போ..!! ஆனா.. நான் ஒரு விஷயத்துல கமிட் ஆயிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்..!! அந்த லாஜிக் படி பாத்தா கூட.. உன் பேச்சை நான் கேட்க கூடாது..!!" நான் சீரியசாக சொல்ல,

"என்ன எழவெடுத்த லாஜிக்டா அது..? இங்க பாரு ஜூனியர்.. இந்த மாதிரி படத்துல வர்ற பன்ச் டயலாக்லாம் பேசி.. ஒரு பாழுங்கெணத்துல போய் விழுந்துடாத..!!" சீனியர் நக்கலடித்தார்.

"பாழுங்கெணறா..? யாரை சொல்ற நீ..?"

"லேகாவைத்தான்..!! சரியான ராட்சசி அவ..!! அவளை கட்டிக்கிட்டா.. உன் வாழ்க்கையே நாசமா போயிடும் ஜூனியர்.."

"சும்மா உளறாத சீனியர்.. லேகாவைப் பத்தி உனக்கு என்ன தெரியும்..?"

"ஹாஹா..!! நீ அவளை ஒருவருஷமா லவ்தான் பண்ணிருக்குற.. நான் அடிஷனலா.. அவ கூட இருபத்துநாலு வருஷம் குடும்பம் நடத்தி குப்பை கொட்டிருக்கேன்..!! எனக்கு அவளைப் பத்தி எல்லாம் தெரியும்.. உனக்குத்தான் அவளைப் பத்தி ஒரு எழவும் தெரியாது..!!"

"ஏன் தெரியாது.. நான் என் லேகாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்.. அவளை பத்தி எல்லாம் தெரியும் எனக்கு.."

"ஓஹோ..? அப்போ நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்றியா..?"

"கேளு.."

"லேகாவுக்கு கராத்தே, குங்ஃபூ-லாம் தெரியும்.. அந்த மேட்டர் உனக்கு தெரியுமா..?"

"ம்ஹூம்.. தெரியாது..!!"

"கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுக்குவ..!!" சீனியர் பட்டென சொல்ல, திடுக்கென ஒரு பதற்றம் வந்து என்னை பற்றிக் கொண்டது.

"யோவ்.. எ..என்னய்யா சொல்ற..?" என் வாயிலிருந்து வார்த்தைகள் உதறலாக வெளிப்பட்டன.

"ஆமாம் ஜூனியர்.. சொன்னா நீ நம்பமாட்ட..!! கல்யாணம் ஆன நாள்ல இருந்தே ஆரம்பிச்சுட்டா.. காரணமே இல்லாம கன்னாபின்னான்னு அடி விழும்.. உப்புசப்பு இல்லாத மேட்டருக்குலாம் சப்புசப்புன்னு அறை விழும்..!! டெயிலி அடி உதைதான்..!! இருபத்து நாலு வருஷம்..!! ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்...!! அவகிட்ட அடிவாங்கி அடிவாங்கி.. என் உடம்புலாம் ரணரணமா ஆயிடுச்சு..!! கராத்தேலாம் பரவால ஜூனியர்.. கொஞ்சம் ப்ராக்டீஸ் எடுத்துக்கிட்டா.. சமாளிச்சுடலாம்..!! சில நேரங்கள்ல கையை முறுக்கிட்டு காட்டுத்தனமா அடிப்பா பாரு.. அதைத்தான் தாங்கிக்க முடியாது..!!" சீனியரின் குரலில் எக்கச்சக்க சோகம். பாவமாக இருந்தது.

"என்ன சீனியர்.. இப்படி பயமுறுத்துற..?"

"பயமுறுத்தலைப்பா.. உனக்கு ஃப்யூச்சர்ல வரப்போற ஃப்ராக்ச்சரைப் பத்தி சொல்றேன்..!! உனக்கு தம்மடிக்கிறது புடிக்கும்ல..?"

"ஆமாம்.."

"கல்யாணத்துக்கு அப்புறம் தம்மடிச்சா.. உன் நெஞ்சுலையே ஏறி மிதிப்பா..!!"

"ஐயையோ.. அப்போ தண்ணியடிச்சா..?"

"கு.." சீனியர் சொல்ல ஆரம்பிக்க,

"வேணாம் விடு.. எனக்கு புரிஞ்சு போச்சு..!!" என்றேன் நான் அவசரமாய்.

"ஐயையே.. நான் அதை சொல்லலை..!! 'குடிக்கிறதைப் பத்தி கல்யாணத்துக்கு அப்புறம் நெனச்சே பாக்காதேன்'னு சொல்ல வந்தேன்..!!"

"ஓஹோ..????"

"மொத்தத்துல.. அவளை கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒண்ணுதான்.. கண்ணை தொறந்துக்கிட்டே கன்னி வெடி மேல காலை வைக்கிறதும் ஒண்ணுதான்..!! எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு.. ஒரே டெரர்ர்ரா இருக்கும் ஜூனியர்..!!"

சீனியர் அப்புறமும் கொஞ்ச நேரம் தன் மனைவியிடம் அடிவாங்கின கதையை விரிவாக.. அழுதுகொண்டே சொன்னார். அவர் சொன்னதெல்லாம் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் வேறு வழியில்லாமல் பொறுமையாக கேட்டுக் கொண்டேன். அவர் சொல்லி முடித்ததும் நான் அந்த கேள்வியை கேட்டேன்.

"ஒன்னு கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத..!! அவளோ கஷ்டப்பட்டு.. நீ எதுக்கு அவளோட குடும்பம் நடத்தனும்..? பேசாம டைவர்ஸ் பண்ணிட வேண்டியதுதான..?"

"ஏன்.. நான் உசுரோட இருக்குறது உனக்கு புடிக்கலையா..? நான் அவகிட்ட போய் டைவர்ஸ் கேட்டா.. 'டை (die)' மட்டுந்தான் கெடைக்கும்.. 'வர்ஸ்' கெடைக்காது..!!"

"ஐயையோ.. அவ்ளோ பெரிய ராட்சசியா..?" என்றேன் நான் போலி அதிர்ச்சியுடன்.

"ஆமாம் ஜூனியர்.. ஒரேடியா போட்டுத் தள்ளிடுவா..!!"

"ம்ம்ம்ம்.. நீ சொல்றதுலாம் நம்புறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சீனியர்.. அப்பாவியா இருக்குற என் லேகாவை.. அந்த மாதிரி அடங்கப் பிடாரியா, இமேஜின் கூட பண்ண முடியலை..!!"

"யார் அப்பாவி..? லேகாவா..? அவளைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..? அவ ரெண்டு வருஷம் படிச்ச காலேஜை விட்டுட்டு.. உன் காலேஜ்ல டைரெக்ட் தேர்ட் இயர் வந்து சேர்ந்தாளே.. அதுக்கு என்ன ரீசன்னு தெரியுமா..?"

"அந்த காலேஜ்ல ராகிங் தொல்லை ஜாஸ்தின்னு.."

"அதெல்லாம் சும்மா.. இவளை ராகிங் பண்றாங்களா..? இவ யாரையும் ராகிங் பண்ணாம இருந்தா சரிதான்..!! அவளோட ரவுடித்தனம் தாங்காம.. பழைய காலேஜ்ல இருந்து அவளை தொரத்தி விட்டுட்டாங்க.."

"ரவுடித்தனமா..? என்னய்யா சொல்ற..?" எனக்கு டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது.

"பின்ன..? பழைய காலேஜ்ல ஏழெட்டு பேர் மண்டையை உடைச்சிருக்கா.. அவளைப் போய் அப்பாவின்ற..?"

"அவளைப் பாத்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலையே சீனியர்..?"

"காரணம் இருக்கு ஜூனியர்.. உனக்கு அவளோட சுயரூபம் தெரியலை..!! அவ இப்போ ஒரு வருஷமா.. உடைக்காவிரதத்துல இருக்குறா.. அதான்..!!"

"என்னது..??? உடைக்காவிரதமா..??? உண்ணாவிரதம் தெரியும்.. அதென்ன உடைக்காவிரதம்..?"

"யார் மண்டையையும் ஒரு வருஷத்துக்கு உடைக்கிறது இல்லை' அப்டின்னு ஒரு விரதம்..!!"

"என்னய்யா.. எல்லாம் புதுசு புதுசா சொல்ற..? எதுக்கு அப்படி ஒரு விரதம் இருக்குறா..?"

"சொல்றேன் ஜூனியர்.. இந்த வாரம் அவளுக்கு பர்த்டே வருது.. ஞாபகம் இருக்கா..?"

"ஆமாம்.."

"போன வருஷ பர்த்டே அதுவுமா.. அவளோட பழைய காலேஜ்ல பிரச்னை ஆயிடுச்சு..!! இவ ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரை தூக்கி.. ஒரு பையன் மண்டைல போட்டுட்டா.."

"என்னது..????? மானிட்டரைத் தூக்கி மண்டைல போட்டுட்டாளா..???" கேட்கும்போதே எனக்கு குலை நடுங்கியது.

"ஆமாம்.. அதனாலதான் அவளை காலேஜ்ல இருந்து தொரத்தி விட்டாங்க..!! அவ அப்பாவும், அண்ணனும் 'நீ திருந்தவே மாட்டியா..?'ன்னு அவளை கன்னாபின்னான்னு திட்டிருக்காங்க..!!"

"ம்ம்ம்.."

"அப்போத்தான் அவ அண்ணன் அவளுக்கு ஒரு சேலன்ச் பண்ணிருக்கான்.."

"என்ன..?"

"இன்னும் ஒரு வருஷத்துக்கு யார் மண்டையையும் இவ உடைக்காம இருந்தா.. சொத்துல அவனோட ஷேர்ல பாதியை இவளுக்கு எழுதி வைக்கிறதா..!! இவளும் அந்த சேலஞ்சை அக்சப்ட் பண்ணிட்டு.. இப்போ.."

"உடைக்கா விரதத்துல இருக்குறா..!!"

"ஆமாம்..!!"

"ம்ம்ம்ம்.. ரொம்ப கேவலமான ப்ளாஷ்பேக்கா இருக்கு..!! சொத்துக்காக பலபேர் மண்டையை உடைச்ச கதைலாம் கேட்டிருக்கேன்..!! ஆனா.. யார் மண்டையையும் உடைக்காம விரதம் இருக்குறதை இப்போத்தான் கேள்விப்படுறேன்..!! ஆமாம்.. இந்த மேட்டர்லாம் உனக்கு எப்படி தெரியும்..!!"

"எல்லாம் அவளே சொன்னா.."

"அவளேவா..??"

"ஆமாம் ஜூனியர்.. இந்த பொறந்த நாளோட.. அவளோட அந்த விரதமும் முடியுது..!! அப்புறம் அவளோட கேரக்டர்லாம் கொஞ்சம் கொஞ்சமா உனக்கு தெரிய வரும்.. அப்போ இந்த மேட்டரும் ஒன்னு ஒன்னா வெளில வரும்..!!"

"ம்ம்ம்ம்.. என்னவோ போயா..!! நீ சொல்றதுலாம் நம்புற மாதிரியே இல்ல..!!" நான் இன்னும் நம்பிக்கை இல்லாமல் சொல்ல, சீனியர் கடுப்பானார்.

"அடப்பாவி.. விடிய விடிய கதை கேட்டு.."

"நயன்தாராவுக்கு பிரபுதேவா பெரியப்பான்னு சொல்றேன்றியா..?"

"அதை வேற மாதிரில சொல்வாங்க..?"

"நான் இப்படித்தான் சொல்வேன்.."

"அப்போ.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..?"

"ஆமாம்..!!"

"ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ.. அவ ஏன் உன்னை லவ் பண்றா தெரியுமா..?"

"தெரியுமே.. நான் கொஞ்சம் ஹேண்ட்ஸமா.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சீனியர் எரிச்சலுடன் இடைமறித்தார்.

"ஜூனியர்.. இந்த மெசின்தான் நான் இப்போ கண்டுபிடிச்சேன்..!! கண்ணாடி இருபத்து நாலு வருஷத்துக்கு முன்னாடிலாம் கண்டு பிடிச்சுட்டாங்க..!!"

"சரி.. வேற எதுக்கு என்னை லவ் பண்ணுனான்னு சொல்ற..?"

"ஏன்னா நீ ஒரு அப்பாவி.. அவ சொன்னதுக்குலாம் தலையை ஆட்டுவ.. அவ குணத்துக்கு தோதான ஆளுன்னு அவளுக்கு தெரியும்னு.."

"என்ன சொல்ற நீ..?"

"ம்ம்ம்ம்.. நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவன்னு அவளுக்கு தெரியும்.. அதான் உன்னை லவ் பண்றான்னு சொல்றேன்..!!"

"என்னய்யா ரொம்ப பயமுறுத்துற..?"

"பயமுறுத்தலை ஜூனியர்.. உன் லைஃப்ல வரப்போற கஷ்டத்தை சரி பண்ணிக்க.. இது ஒரு நல்ல சான்ஸ்..!! யூஸ் பண்ணிக்கோன்னு சொல்றேன்.. அவளை கழட்டிவிட்டுடுன்னு சொல்றேன்..!!"

"ம்ம்ம்ம்... சரி..!! எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. நான் கொஞ்சம் யோசிக்கணும்.."

"கொஞ்சம் என்ன.. நெறைய யோசி..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோ.. ஆனா.. நாளைக்குள்ள நம்பிடு..!!" அவர் அந்த மாதிரி சொன்னது எனக்கு காமடியாக இருந்தது. சற்றே கிண்டலான குரலில் கேட்டேன்.

"ஏன் சீனியர்.. லேகா உன்னை அடிக்கிறப்போ.. நெறைய அடி உன் தலைலேயே விழுமோ..?"

"ஆமாம்.. ஏன் கேக்குற..?"

"இல்ல.. எஃபக்ட் தெரியுது..!! எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோன்ற.. அப்புறம் நாளைக்கே நம்பிடுன்ற..!! மூளைல முக்கியமான கேபிள்லாம் கட் ஆன எஃபக்ட்லையே பேசுற நீ..!!"

"ஐயோ ஜூனியர்.. நீதான் அவசரம் புரியாம பேசுற.. இன்னும் நாலு நாள்ல உனக்கு பேராப்பு வரப் போகுது..!! நீ சீக்கிரமா ஒரு முடிவுக்கு வரலை.. என் கதிதான் உனக்கும்..!!"

"ஆமாம்.. இது ஒண்ணை சொல்லிடுயா.. 'பேராப்பு.. பேராப்பு..'ன்னு..!! சரி சரி விடு.. நான் நாளைக்கு என்னோட முடிவை சொல்றேன்..!!"

"ஓகே..!!"

கால் கட் செய்யப்பட்டதும், நான் படியிறங்கி என் ரூமுக்கு வந்தேன். ஜானி 'பப்பரக்கா..!!' என்று படுத்துக் கிடந்தான். தூக்கத்திலும் விடாமல் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான். நான் அவனை கடந்து சென்று, என் ரூமுக்குள் நுழைந்து கொண்டேன். கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டேன்.

ராட்சசி என்று லேகாவை பற்றி சீனியர் சொன்ன மேட்டர்களே, ராட்டினம் போல மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தன. அவர் சொன்ன மாதிரி லேகாவை ஒரு அடங்காப்பிடாரியாக கற்பனை செய்து பார்க்கவே, மனம் மறுத்து மறியல் செய்தது. ஆனால்… அவர் சொன்னது மட்டும் உண்மையாக இருந்துவிட்டால்..???? நினைத்துப் பார்க்கவே உடம்பு பயத்தில் நடுங்கியது..!! சில்லிட்டுப் போன மாதிரி சிலிர்ப்பெழுந்து அடங்கியது..!! காலம் முழுதும் காட்டுத்தனமாய் அடி வாங்கவா அவளைக் கட்டிக் கொள்வது..?? 

அன்று இரவு லேகாவுடன் கடலை வறுக்கும்போதும், மனம் ஒன்றாமல்.. பட்டும் படாமல்.. கடலை கருகாமலே வறுத்தேன்..!!

அடுத்த நாள் லேகாவிடம் அவளுடைய கடந்தகால வாழ்க்கை பற்றி கேட்க நினைத்தேன். காலேஜ் முடிந்ததும், அவளை அழைத்துக் கொண்டு பீச் சென்றேன் (மொளகா பஜ்ஜி வாங்கி கொடுப்பா.. அஞ்சு மணிக்குலாம் போனா சூடா கிடைக்கும்..). ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடமாக தேடிப் பிடித்து (ஹலோ.. இந்த துப்புற வேலைலாம் வச்சுக்காதீங்க.. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்..!!) நெருக்க்க்க்கமாக அமர்ந்து கொண்டோம். கொஞ்ச நேரம் பொதுவான கதைகள் பேசியவன் மெல்ல மேட்டருக்கு வந்தேன்.

"லேகா.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்.."

"கேளு.. கிஸ் தவிர வேற என்ன வேணா கேளு.." அவள் கிண்டலான குரலில் சொல்ல,

"ஐயயே.. அதெல்லாம் வேணாம்..." என்று நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவளோ பயங்கர டென்ஷன் ஆனாள்.

"என்னது.. ஐயயேவா..? என் கிஸ் உனக்கு ஐயயேவா..? அதுக்குள்ளே நான் சலிச்சு போயிட்டானா..?"

"ஹே.. நான் அப்படி சொல்லவே இல்லையே..?"

"இல்ல இல்ல.. நீ அப்படித்தான் சொன்ன..?"

"நான் எங்கே சொன்னேன்..? நீதான் கிஸ் தரமாட்டேன்னு சொன்ன..?"

"நான் தரமாட்டேன்னு சொன்னா.. நீ விட்டுடுவியா..?? பேசாத போ..!!"

அவள் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டதும் இல்லாமல் வேறுபக்கம் வேறு திருப்பிக் கொண்டாள். நான் தலையை சொறிந்தவாறு தேமே என்று அமர்ந்திருந்தேன். இது என்னடா வம்பா போச்சு..? நான் என்ன பேச நினைத்தேன்.. இவள் என்ன செய்கிறாள்..? ஒரு பேச்சுக்கு ஐயயே என்றது ஒரு குத்தமா..? இதுகளை எல்லாம் காதலித்து..?? ச்சை..!!! இன்னைக்கு மொளகா பஜ்ஜி அவ்வளவுதானா..?? ம்ஹூம்.. விடக்கூடாது..!! மெல்ல எனது கையை அவளது தொடையில் வைத்து அழுத்தினேன்.

"ஸாரிடி லேகாக்குட்டி..!!"

"ப்ச்.. ஒன்னும் வேணாம் போ..!!" அவள் என் கையை தட்டிவிட்டாள்.

"சரி.. உன் ஆசை எனக்கு புரியுது..!! கிஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டுட்ட..!! பரவால.. கிஸ் பண்ணிட்டு போ..!!" சொல்லிக்கொண்டே நான் என் உதடுகளை பிதுக்கி அவள் முகத்துக்கு முன் காட்ட, அவளோ என் உதட்டிலேயே பட்டென அறைந்தாள்.

"ஆசையைப் பாரு.. உன் கிஸ்க்காக இங்க யாரும் தவிச்சுப் போய் கெடக்கலை..!! சரி.. நீ என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு..!!"

"அதுவா..??? அ...அது..."

"ம்ம்ம்.. சொல்லு..!!"

"நீ உன் பழைய காலேஜை விட்டுட்டு ஏன் வந்த..?" நான் பட்டென கேட்டேன்.

"அதான் சொன்னேனே.. ராகிங் ப்ராப்ளம்னு..!!"

"நெஜமாவே ராகிங் ப்ராப்ளம்தானா..?" நான் இப்போது கேள்வியை கொஞ்சம் ஷார்ப்பாக்கினேன்.

"ஆ..ஆமாம்.. ஏன் கேக்குற..?" அவளுடைய பதிலில் இப்போது லேசான தடுமாற்றம்.

"இல்ல.. என் பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சேன்.. அந்த காலேஜ்ல அப்டிலாம் எதுவும் ப்ராப்ளம் இல்லைன்னு கேள்விப்பட்டேன்.. அதான்..!!"

இப்போது லேகா பட்டென அமைதியானாள். என் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தவள், பின்பு தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய செய்கையை கண்டு நான் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய மூக்கு விசும்ப ஆரம்பித்தது. கண்ணீர் வராத கண்களை விரல்களால் துடைத்துக் கொண்டாள். அதற்கே நான் உருகிப் போனேன்.

"ஐயையோ.. என்ன லேகா குட்டி.. இதுக்கு போய் அழுவுற..? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா..?" கேட்டுக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தை பற்ற, அவள் என் கையை விலக்கினாள்.

"ப்ச்.. நீ தப்பாலாம் ஒன்னும் கேக்கலை..!! எனக்குத்தான் பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு..!!" 

"ப..பழசா..??? என்னது அது..???" நான் நடுங்கும் குரலில் கேட்டேன்.

"அ..அதை.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை.."

"பரவால்ல லேகா.. சொல்லு..!!"

"நீ எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டியே..?"

"ச்சேச்சே.. நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேண்டா.. சொல்லு..!!"

"எங்க காலேஜ்ல திவாகர்னு ஒரு பையன் இருந்தான் அசோக்..!!" அவள் ஒருமாதிரி சோகமான குரலிலேயே சொன்னாள்.

"சரி..!!" (அவன் மண்டைலதான் மாவுக்கட்டு போட வச்சியா..?)

"ஒண்ணா நம்பர் ரவுடி..!!"

"சரி..!!" (அப்போ நீதான் ரெண்டாம் நம்பரா..?)

"எனக்கும் அவனுக்கும் ஆகாது..!! போன வருஷம் என் பொறந்த நாளுக்கு அவன் என்ன பண்ணினான் தெரியுமா..?"

"என்ன பண்ணினான்..?" 

"பர்த்டே கிஃப்டா.. எனக்கு ப்ராவும் ஜட்டியும் பார்சல் அனுப்பிட்டான்..!!"

"ஐயையோ..!! அப்புறம்..??" (அடப்பாவி சீனியர்.. இதை நீ சொல்லவே இல்லையே..?)

"நீயே சொல்லு.. எந்தப் பொண்ணுக்குத்தான் கோவம் வராது..?"

"ம்ம்.. வரும் வரும்..!!" (கோவத்துல நீ என்ன செஞ்ச.. அதை சொல்லு மொதல்ல..)


"அன்னைக்கு அவன் கம்ப்யூட்டர் லேப்ல இருந்தான்.. அவன்கிட்ட போய் ஏன் இப்டி பண்ணினேன்னு கேட்டேன்..!! அதுக்கு அவன்.. 'அப்டித்தாண்டி அனுப்புவேன்.. நாளைக்கு அதை போட்டுக்கிட்டு காலேஜுக்கு வாடி'ன்னு திமிரா சொல்றான்..!! எனக்கு வந்துச்சே கோவம்..??"

"ஐயையோ.. என்ன பண்ணுன..?"

"கைல கெடைச்ச ஒரு மவுஸை எடுத்து அவன் மேல எறிஞ்சுட்டேன்..!!"

"மவுஸா...????" (இவ என்ன புதுசா ஒரு ஐட்டம் சொல்றா..?)

"யெஸ்.. அது.. அது.. இத்துனூண்டு.. சின்ன மவுஸ்தான் அசோக்..!!"

"ஓஹோ..??" (ஆமாம்.. மவுஸ்னா சின்னதாத்தான் இருக்கும்.. மானிட்டர்தான் கொஞ்சம் பெருசா இருக்கும்..)

"அதுக்கே அவனுக்கு மண்டை பொடைச்சுக்கிச்சு..!!" 

"ம்ம்..!!" (பொடைச்சுக்கிச்சா.. பொளந்துக்கிச்சாடி..???)

"அதுக்கு.. அதுக்கு... என்னை காலேஜ்ல இருந்து அனுப்பிட்டாங்க அசோக்..!! அவன் அப்பா அந்த காலேஜ் மேனேஜ்மண்ட்ல பெரிய ஆளு..!! எல்லாரும் சேர்ந்து பாலிட்டிக்ஸ் பண்ணி.. என்னை வெளில அனுப்பிட்டாங்க..!! என் படிப்பை ஸ்பாயில் பண்ணிட்டாங்க..!!"

"அச்சச்சோ...!!" (சீனியர்.. நெறைய மேட்டர் நீ என்கிட்டே இருந்து மறைச்சிருக்க..!!)

"நீ கேட்டதும் எனக்கு பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு..!! எனக்கு.. எனக்கு.. அழுகை அழுகையா வருது அசோக்..!!"

அவள் விசும்பிக்கொண்டே, என் தோளில் சாய்ந்து கொண்டாள். அப்புறம் என்ன..? ஆம்பளைங்க அழுதாலே எனக்கு தாங்காது..!! இவள் பெண்.. அதிலும் என் காதலி.. அதிலும் எனக்கு எல்லாம் செலவு செய்யும் காதலி..!! உருகிப் போனேன்..!! அவள் தோள் மீது கை போட்டு என்னுடன் இறுக்கிக் கொண்டேன்.

"ச்சே.. ச்சே..!! யாரோ பண்ணின தப்புக்கு நீ ஏண்டா அழுவுற செல்லம்..? கண்ணை தொடைச்சுக்கோ..!! ப்ச்.. கண்ணை தொடைச்சுக்கோன்னு சொல்றேன்ல..? அழக்கூடாது..!!"

அவள் அப்புறமும் கொஞ்ச நேரம் என் தோளில் சாய்ந்து விசும்பிக்கொண்டே கிடந்தாள். நான் அவளை மென்மையாக அணைத்துக்கொண்டு அவளுடைய முதுகை இதமாய் தடவிக் கொடுத்தேன். ஓரிரு நிமிடங்கள்..!! அப்புறம் லேகா பட்டென எழுந்தாள். அதுவரை அங்கே நடந்ததுக்கு சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்.

"மொளகா பஜ்ஜி சாப்பிடலாமா அசோக்..?"

'என்ன இது.. திடீரென மொளகா பஜ்ஜி சாப்பிடலாம் என்கிறாள்' என்று எனக்கு ஒரு அவசர யோசனை வந்தாலும், 'சரி.. மொளகா பஜ்ஜிதானே சாப்பிடலாம் என்கிறாள்..? இன்னைக்கு தொட்டுக்க காரசட்னி வச்சிருப்பானா..? இல்ல.. புதினா சட்னி வச்சிருப்பானா..?' என படாரென்று வேறு மாதிரி யோசனையில் மூழ்க ஆரம்பித்தேன். உடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

"பஜ்ஜிதான..? சாப்பிடலாம் லேகாக்குட்டி..!!" என்று இளித்தவாறே சொன்னேன்.

லேகாவுடன் ஊர் சுற்றிவிட்டு, என் ரூமுக்கு வந்து சேர இரவு எட்டு மணி ஆகிவிட்டது. வந்து சேரவும், என் வயிறு கலக்கவும் சரியாக இருந்தது..!! எல்லாம் பீச்சில் சாப்பிட்ட அந்த மொளகா பஜ்ஜி செய்த வேலை..!! அவசர அவசரமாய் பேன்ட் கழட்டிப் போட்டுவிட்டு, லுங்கிக்கு மாறினேன். தம் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டேன்..!! கொஞ்ச நேரம்... கண்கள் மூடி... சுகமாக... புகை விட்டபடி..!!

"இந்த நிமிடம்.. இந்த நிமிடம்.. இப்படியே உறையாதா........"

வெளியே இருந்து என்னுடைய செல்போனின் ரிங்டோன் சத்தமாக கேட்டது. 'ச்சே.. நேரம் கெட்ட நேரத்தில் யார் அது..?' என்று எரிச்சலாக இருந்தது. ஆனால் எழுந்து செல்லவும் மனமில்லை. ஆனது ஆயி'ப்போச்சு..!!!! இன்னும் அஞ்சு நிமிஷம் என்று தோன்றியது..!!!! 'யாராக இருக்கும்..?' என்று ஒரு யோசனை ஓடியது. அப்புறம் 'யாராக இருந்தால் என்ன..? வெளியே சென்று மிஸ்ட் கால் கொடுத்தால் திரும்ப கால் செய்யப் போகிறார்கள்..!!' என்று நினைத்தவனாய், சிகரெட் முனையில் வாய் வைத்து, அதன் புகையை அடிவயிறு வரை உள்ளிழுத்தேன்.

திடீரென ரிங்டோன் சத்தம் நின்றது. யாரோ பிக்கப் செய்கிறார்களோ என்று நான் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, கால்சென்டர் எக்சிகியூட்டிவ் தோரணையில் ஜானியின் குரல் கேட்டது.

"ஹலோ.. சொல்லுங்க ஸார்..!! யார் வேணும் உங்களுக்கு..??"

'ஐயையோ.. இந்த லூசு எதுக்கு எனக்கு வந்த காலை பிக்கப் பண்ணுது..?' என்று நான் டாய்லட்டுக்குள் புகைந்தவாறும், புகைத்தவாறும் இருக்க, அவன் செல்போனில் தொடர்ந்து பேசினான்.

"அவர் இப்போ கொஞ்சம் பிஸியா டாய்லட் போயிட்டு இருக்காரு..!!" (அடச்சே.. என் மானத்தை வாங்குறதுக்குனே வந்து தொலைச்சிருக்குது இந்த நாய்..!!) 

""



"நான் அவரோட உயிர் நண்பன் ஸார்.. என்ன மேட்டர்னாலும் எங்கிட்ட நம்பி சொல்லலாம்..!! அவர் டாய்லட்ல இருந்து வெளில வந்ததும் நான் சொல்லிர்றேன்..!!"


""

"ஹையோ.. பரவால்ல ஸார்.. சொல்லுங்க..!! நீங்க என்ன முக்கியமான விஷயம் பேசினாலும்.. அவர் எப்படியும் எங்கிட்ட சொல்லத்தான் போறாரு.. அதை நீங்களே சொல்லிடுங்களேன்..!! உங்க பேரு என்ன ஸார்..?"

""

"ஓ..!! உங்க பேரும் அசோக்தானா..?"

ஜானி அங்கு ஆச்சரியமாக கேட்க, எனக்கு இங்கு சிகரெட் புகை குப்பென்று நாசிக்குள் ஏறியது. கண்கள் எரிந்து உடனடியாய் நீர் கொட்ட, 'லொக்.. லொக்.. லொக்..' என இருமினேன். அவசர அவசரமாய்.. சிகரெட்டை சிங்க்குக்குள் போட்டுவிட்டு.. தண்ணியை பின்னால் ஊற்றி விட்டு.. டாய்லட் கதவை திறந்து வெளியே வந்தேன்..!! 

"என்ன பாஸ்.. இவ்வளவு நெருங்கிட்டோம்.. அந்த முக்கியமான விஷயம் என்னன்னு சொல்ல மாட்டேன்றீங்களே..?" இளித்தவாறு பேசிக்கொண்டிருந்த ஜானியிடம் இருந்து செல்போனை பட்டென பறித்தேன். பறித்த வேகத்தில், பயங்கர கடுப்புடன் அவனை முறைத்தேன்.

"மசுரு.. இப்போ எதுக்குடா எனக்கு வந்த காலை பிக்கப் பண்ணின..?"

"இல்ல மச்சி.. இது கத்தினு கெடந்தது.. நீ வேற கக்கா போயிட்டுருந்த..!! அதான் எடுத்தேன்... யாரு மச்சி இந்த அசோக்..??" அவன் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் கேட்க,

"த்தா.. மடக்..!! போயிருடா..!! அப்டியே ஏறி மிதிச்சுடுவேன்..!!" நான் கத்தினேன்.

அவன் அப்புறமும் அசட்டுத்தனமாய் ஒருமுறை என்னைப் பார்த்து இளித்துவிட்டு, வெளியேறினான். அவன் சென்றதும் நான் கதவை அறைந்து சாத்தினேன். தாழ்ப்பாள் போட்டேன். அவனை அடித்து துரத்தியதில், ஆத்திரம் சுத்தமாய் குறைந்து போனவனாய், சீனியரிடம் ஜாலியான குரலிலேயே ஆரம்பித்தேன். 

"ஆங்.. சொல்லு சீனி..!!"

"என்னது..?? சீனியா..??" அடுத்த முனையில் சீனியர் ஆச்சரியமான குரலில் கேட்டார்.

"ஆமாம் சீனி.. இனிமே உன்னை சீனினுதான் கூப்பிடனும்னு அவர் சொல்லிருக்காரு..!!"

"யாரு..?"

"இந்தக்கதையை எழுதுற ஸ்க்ரூ..!! சீனியர்னு நீளமா டைப் பண்ண கஷ்டமா இருக்காம்.. அதான் ஷார்ட்டா சீனின்னு கூப்பிட சொல்லிருக்காரு..!!"

"ஓஹோ...? அவரே சொல்லிட்டாரா..? அப்போ நானும் இனிமே உன்னை ஜூனின்னே கூப்பிடுறேன்..!!"

"ஏன்.. உன்கிட்டயும் அந்த ஆளு ஏதாவது சொன்னாரா..?"

"இல்ல இல்ல..!! நீ என்ன விட சின்னப்பையன்.. உன்னை எதுக்கு 'ர்ர்ர்' போட்டு ஜூனியர்னு மரியாதையா கூப்பிடனும்..? அதான்.. இனிமே ஜூனின்னே கூப்பிடுறேன்..!!"

"அய்யைய்யைய்யையோ...!! உன் மொக்கைக்கு, அந்த ஆள் மொக்கையே தேவலாம் போல இருக்கு..!! ச்சை...!! சரி.. மேல சொல்லு..!!"

"அதுசரி.. இப்போ எங்கிட்ட பேசுனது யாரு..? ஜானியா..?"

"ஆமாம்.. அந்த நாயியேதான்..!!"

"ஹ்ஹா.. ரொம்ப நாளுக்கப்புறம் அவன் வாய்ஸை கேக்குறேன் ஜூனி.. ரொம்ப ஹேப்பியா இருந்தது.."

"ம்க்கும்.. ரொம்ப முக்கியம்..!! பெரிய பெப்சி உமா வாய்ஸ்.. கேட்டதும் ஹேப்பியா இருக்குதாம்..!! அப்புறம் சீனி. உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்.."

"என்ன..?"

"இந்த ஜானி நாயி.. ஏதாவது தண்ணி லாரிலையோ.. குப்பை லாரிலையோ.. அடிபட்டு சாகுற மாதிரி.. உன்னால பாஸ்டை சேன்ஜ் பண்ண முடியுமா..?" நான் ஆர்வமாக கேட்க,

"ஐயையோ..!! பாவம் ஜூனி அவன்..!!" அடுத்த முனையில் சீனியர் பதறினார்.

"பாவமா அவன்..? படுத்துறான் சீனி..!! லேகாவை கழட்டி விடுறதுக்கு பதிலா.. இவனை நீ கழட்டிவிட சொன்னேன்னு வச்சுக்கோ.. நான் சந்தோஷமா செய்வேன்..!!"

"அவனை விடு.. அவன் இன்னும் கொஞ்ச நாள்ல.. தானா கழண்டுக்குவான்..!!"

"நெஜமாவா சொல்ற..?" அவர் சொன்னதைக்கேட்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

"ஆமாம்.. அந்த அழகுவேணியோட போய் செட்டில் ஆயிடுவான்..!!"

அழகுவேணி என்றால் எங்கள் ரூமிற்கு அடிக்கடி வருவாளே.. ஜானியின் அத்தை.. அவள்..!!


"ஓ..!! அவன் அத்தையோட போய் செட்டில் ஆகப் போறானா..?"

"ஐயையோ.. அது அவன் அத்தை இல்ல ஜூனி..!! அது ஒரு ஆந்த்ரா ஐட்டம்..!!" சீனியர் சொல்ல, நான் அப்படியே ஷாக்காகிப் போனேன்.

"யோவ்.. என்னய்யா சொல்ற..? ஐட்டமா..??"

"ஆமாம் ஜூனி.. அத்தைன்னு சொல்லி உன்னை நல்லா ஏமாத்திட்டு இருக்குறான்..!! அவன் அவளோட போய் செட்டில் ஆனப்புறந்தான் எனக்கும் அந்த மேட்டர்லாம் தெரிய வந்துச்சு..!!"

சீனியர் சொல்ல சொல்லத்தான் எனக்கு இப்போது நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. அப்படியானால் அந்த அழுக்குவேணி ஒரு ஐட்டமா..? அதனால்தான் நான் வெளியில் செல்லும் நேரம் பார்த்து ரூமுக்கு விசிட் விடுகிறாளா..? நான் ரூமுக்கு திரும்பும் போதெல்லாம் அவளே வந்து கதவை திறக்கிறாளா..? இந்த ஜானி நாய் அழுக்கு தேய்த்து குளித்துக் கொண்டிருக்கிறதா..? பஜனையை முடித்துவிட்டுத்தான்.. பக்திப்பழம் மாதிரி வந்து அமர்ந்து கொள்கிறானா..? 

அட படுபாவி.. என்னுடைய சில்லறை சீக்ரட்டுகளை எல்லாம் நோண்டி நோண்டி தெரிந்து கொள்வானே..? நானும் என் ஓட்டை வாயை திறந்து ஒன்னு விடாமல் கொட்டுவேனே..? இரண்டு வருடமாய்.. இவ்வளவு பெரிய சீக்ரட்டை என்னிடம் இருந்து மறைத்து.. அந்த அழுக்கு மூட்டையுடன் ஆட்டம் போட்டிருக்கிறானே..? இந்த ஜானி எவ்வளவே பெரிய கேடியாக இருக்க வேண்டும்..??

"என்ன ஜூனி.. சைலன்ட் ஆயிட்ட..?" சீனியர் என் யோசனையை கலைத்தார்.

"இல்ல சீனி..!! இந்த ஜானி நாயி.. என்னை எவ்ளோ கேனையனாக்கிருக்கான்னு யோசிச்சுட்டு இருந்தேன்..!!" 

"ஐயோ.. அதை விடுப்பா.. நாம லேகா மேட்டருக்கு வருவோம்..!!

"ம்ம்ம்.. சொல்லு..!!"

"நான் சொன்னதை யோசிச்சியா..? இன்னைக்கு முடிவு சொல்றேன்னு சொன்னியே.."

"சீனி.. ஆக்சுவலா நான் உன்மேல ரொம்ப கோவமா இருக்கேன்.. நீ எங்கிட்ட இருந்து நெறைய விஷயத்தை மறைச்சுட்ட..!!"

"என்ன சொல்ற நீ..? நான் என்ன மறைச்சுட்டேன்..!!"

நான் சொல்ல ஆரம்பித்தேன். அன்று மாலை நடந்த விஷயங்களை சொன்னேன்..!! மொத்த மேட்டரையும்.. மொளகா பஜ்ஜி மொதற்கொண்டு ..!! எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட சீனியர், நான் முடித்ததும் சற்றே நக்கலான குரலில் கேட்டார்.

"ஸோ.. மொளகா பஜ்ஜி வாங்கிக்கொடுத்து.. உன் தலைல நல்லா மொளகா அறைச்சுட்டான்னு சொல்லு.."

"என்ன சீனி இப்படி கேவலமா சொல்லிட்ட..?"

"பின்ன என்ன..? அவளும் கதை வுட்ருக்கா.. நீயும் காரசட்னியை நக்கிக்கிட்டே கேட்டுட்டு வந்திருக்க..?" சீனியரின் நக்கலில் நான் சூடானேன்.

"யோவ்.. அவ கதை வுடலை.. நீதான் கதை வுட்ருக்க..!! அந்த திவாகர் பையனை பத்தி நீ எங்கிட்ட எதுவுமே சொல்லலை..!!"

"ஐயோ ஜூனி.. அவன் அப்பா பெரிய ஆளுதான் நான் ஒத்துக்குறேன்..!! ஆனா.. லேகா நீ நெனைக்கிற மாதிரி லேசுப்பட்ட ஆளு இல்ல..!! இவ மேல தப்பு இல்லைன்னா.. எதுக்காக இந்த மேட்டரை இத்தனை நாள் மறைச்சா..? அதை நீ யோசிச்சு பாத்தியா..?"

"அதான் அவ சொல்றாளே.. அந்த இன்சிடண்டை நெனச்சா.. அவளுக்கு கஷ்டமா இருந்ததுன்னு.."

"மண்டை உடைஞ்சு போன அந்தப் பையந்தான கஷ்டப்படணும்..? மண்டையை உடைச்ச இவளுக்கு என்ன கஷ்டம்..?"

"யோவ்.. அவ பொய் சொல்ற மாதிரி எனக்கு தோணலையா சீனி..!! எவ்வளவு பாவமா பேசினா தெரியுமா..?"

"ஆமாமாம்..!! பாய்ஃபிரண்டா இருக்குறப்போ எல்லாம் பாவமாத்தான் பேசுவாளுக.. புருஷனா ஆனப்புறந்தான் பூரிக்கட்டையாலேயே அடிப்பாளுக..!!" சீனியரின் குரலில் அடிபட்ட வலி தெளிவாக தெரிந்தது.

"என்னவோ போயா..!! எனக்கு ஒரே கொழப்பமா இருக்கு.. யாரை நம்புறதுன்னே தெரியலை..!!" நான் நிஜமாகவே குழம்பிப் போனவனாய் புலம்பினேன்.

"என்னைய நம்பு ஜூனி..!!"

"ஒரு வெண்ணையையும் நான் நம்புற மாதிரி இல்ல..!! நீ, லேகா, இந்த ஜானி நாய், அந்த அழுக்குவேணி.. எல்லாம் சேர்ந்து என்னை காமடி பீஸாக்குறீங்க..!!"

"ஹையோ ஜூனி.. அவங்க வேணா அப்படி பண்ணலாம்.. நான் அப்படி பண்ணுவேனா..? நான்தான் நீ.. நீதான் நான்னு அடிக்கடி மறந்துடுற நீ..!!"


"ம்ம்ம்ம்ம்ம்.. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நான் இன்னும் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் சீனி..!! ஆனா.. உன்னையும் சும்மா சொல்லக்கூடாது.. நீயும் பயங்கரமான ஆளுய்யா..!!" நான் சற்று கடுப்புடனே சொன்னேன்.

"ஏன் அப்படி சொல்ற..?"

"பின்ன என்ன..? லேகா வாங்கிக் கொடுத்த செல்போனையே யூஸ் பண்ணி.. அவளுக்கே ஆப்பு வைக்க ட்ரை பண்றேல..?"

"ஜூனி.. அவ செல்போன் வாங்கிக் கொடுத்தது.. செலவழிச்சது.. எல்லாமே நீ ஒரு அப்பாவின்றதாலதான்..!! அடி தாங்குவேன்றதாலதான்..!! அதை ஏன் இன்னும் நம்பமாட்டேன்ற..?"

"ம்ம்ம்..!! அது சரி... இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்.. அவளை கழட்டி வுடு.. கழட்டி வுடுன்னு கெடந்து குதிக்கிறியே.. இதனால உனக்கு என்ன யூஸ்..? நீதான் வாங்குற அடிலாம் வாங்கி முடிச்சுட்டியே..? இப்போ போய் பாஸ்டை சேன்ஜ் பண்றதால உனக்கு என்ன லாபம்..?"

"அதுக்கு காரணம் இருக்கு ஜூனி..!!"

"என்ன..?"

"இப்போலாம் எனக்கு கண்ணை மூடி தூங்குனா.. கையை மடக்கிக்கிட்டு லேகா குத்துறதுதான் கனவா வருது..!!" சீனியர் ரொம்ப ஃபீலிங்காக சொன்னார்.

"ஐயோ.. பாவம்..!!"

"அந்த அளவுக்கு அவ அடிச்ச அடிலாம் என் மூளையை ஆக்ரமிச்சிருக்கு..!! இதுக்குலாம் ஒரே ஒரு சொல்யூஷன்தான் இருக்கு..!!"

"என்னது அது..?" நானும் இப்போது சற்று ஆர்வமானேன்.

"மெம்மரிஸ்..!!"

"மெம்மரிஸா..? என்ன சொல்ற நீ..?"

"ஆமாம் ஜூனி.. மெம்மரிஸ் அப்டின்றது மனுஷ வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியம்..!!" அவர் சீரியசான குரலில் சொல்ல,

"இரு இரு.. இந்த டயலாக்கை நான் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு...!!" என்று குழப்பமான குரலில் சொன்னேன்.

"எங்க கேட்டிருக்க..?"

"இப்போதான்யா... ரீசண்டா.. ம்ம்ம்ம்ம்ம்... ஆங்... ஞாபகம் வந்துடுச்சு...!!"

"என்ன..?"

"இந்த ஆள் ரீசண்டா எழுதின ஒரு கதைலதான்யா.. 'மாங்கல்யம் தந்துனானே..' ஃபர்ஸ்ட் நைட் ஸீன்ல.."

"அடத்தூ...!! நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்குறேன்.. நீ காமடி பண்ணிட்டு இருக்குற..??" சீனியர் நிஜமாகவே டென்ஷனானார்.

"ஓஹோ..?? அது காமடி.. நீ சொல்றது சீரியஸா..?? சரி சரி.. சொல்லு சொல்லு..!!"

"மெமரிஸ்.. மனுஷ வாழ்க்கைல ரொம்ப ரொம்ப முக்கியம் ஜூனி.."

"சரி.. அப்புறம்..?"

"லிவிங்.. அதாவது 'வாழ்தல்' அப்டின்றது.. அந்த செகண்ட் மட்டுந்தான்.. அந்த கணம் மட்டுந்தான்..!! அந்த செகண்ட் போனப்புறம்.. உன்னால அதை ஃபீல் பண்ண முடியாது..!! அது அத்தோட முடிஞ்சு போன ஒரு விஷயம்..!!"

"ஐயையையோ.. கொல்றாண்டா..!!"

"ஆனா... 'மெமரிஸ்' அப்டின்றது.. அந்த மாதிரி இல்ல.."

"வேற எந்த மாதிரி..?"

"நூறு வருஷம் நீ வாழ்ந்த வாழ்க்கையை கூட.. மெமரிஸ்குள்ள போட்டு வச்சுக்கலாம்.. எப்போ வேணாலும்.. அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் பட்டுக்கலாம்..!!"

"ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதேன்னு.. ஆட்டோக்ராப்ல சேரன் சைக்கிள் ஓட்டுவாரே.. அந்த மாதிரியா..??"

"ஆமாம்..!! அதனால.. மெமரி இஸ் மோர் வேல்யபில் தேன் லிவிங்..!!"

"ஐயையையோ.. தத்துவம்டா.. தத்துவம்டா..!! சீனி.. நான் ஒன்னு கேக்கவா..?"


"கேளு..!!"

"உனக்கு இப்போ எத்தனை வயசாகுது..?"

"நாப்பத்தஞ்சு..!! ஏன் கேக்குற..?"

"இல்ல.. நாப்பத்தஞ்சு வயசுல நான் லூசாகப் போறேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுயா சீனி..!!

"ப்ச்.. கிண்டல் பண்ணாத ஜூனி..!! நான் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! நீ இப்போ லேகாவை கழட்டி வுட்டேட்டேன்னு வச்சுக்கோ.. அந்தக்காலத்து அனுஷ்காவோ.. ஒரு காஜல் அகர்வாலோ.. அட்லீஸ்ட் தமன்னாவோ... என் வொய்ஃபா வர ஒரு சான்ஸ் இருக்கு...!!"

"ஓ..!! அப்டி வேற உனக்கு கேடுகெட்ட ஆசைலாம் இருக்கா..??"

"எஸ்..!! அவங்களோட நான் வாழ முடியாட்டாலும்.. வாழ்ந்த மாதிரி ஒரு மெமரி.. எனக்கு அப்டேட் ஆகும்..!! அதை நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப் பட்டுக்குவேன்..!! சாகப்போற காலத்துல.. எனக்கு அதை விட வேற என்ன வேணும்..??"

"ம்ம்ம்ம்.. இப்போ புரியுதுய்யா.. நீ ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மெசினை கண்டுபிடிச்சேன்னு..!!"

"ஆனா.. இதுல உனக்கும் பெரிய அட்வான்டேஜ் இருக்கு..!! நான் சொல்றதை கேட்டேன்னா.. நீ ஃப்யூச்சர்ல வாங்கப்போற அடியலாம்.. அவாய்ட் பண்ணலாம்..!!!"

அவர் அப்படி சொன்னதும், நான் ஒரு சில வினாடிகள் சீரியஸாக தின்க் பண்ணினேன். சீனியர் சொல்லுவதும் சரிதான் என்று பட்டது. அவராவது வாழ்ந்து முடித்துவிட்டார். நான் இனிமேல்தான் அவளுடன் வாழவேண்டும். ஐ மீன்.. அடி வாங்க வேண்டும்..!! சீனியர் சொல்வது மாதிரி கேட்டால் அந்த அடி உதைகளை தவிர்க்கலாம் என்று பட்டது. அவருடன் ஒத்துழைப்பதுதான் எனக்கு நல்லது என்று தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னேன்.

"சரி சீனி.. நீ சொல்றதுலாம் எனக்கு புரியுது..!! லேகாவை கழட்டி விடனும்.. அவ்ளோதான.. விடு.. நான் பாத்துக்குறேன்..!!"

"என்ன பண்ணப் போற..?"

"இதுலாம் சப்பை மேட்டர் சீனி.. பொண்ணுகளை கரெக்ட் பண்றதுதான் கஷ்டம்.. கழட்டி விடுறது ரொம்ப ரொம்ப ஈஸி..!! எங்கிட்ட வுடு.. நான் பாத்துக்குறேன்..!! நாளைக்கே அவளை கழட்டி வுடுறேன் பாரு..!!"

"ஓகே ஜூனி..உன் இஷ்டத்துக்கே விடுறேன்.. ஆனா.. டெயிலி நீ என்ன பண்ணினேன்னு.. போன்ல எனக்கு அப்டேட் கொடுக்கணும்..!! நமக்கு இன்னும் மூணு நாள்தான் டைம் இருக்கு.. அதுக்குள்ளே நீ கழட்டி விடனும்.. அதையும் ஞாபகம் வச்சுக்கோ..!!"

"ஓ..!! மூணாவது நாள்தான் அந்த பேராப்பு வரப்போகுதா..??"

"ஆமாம்..!!"

"அது என்னன்னு கொஞ்சம் சொல்லேன்..?"

"ம்ஹூம்.. அதை நான் சொல்ல மாட்டேன்..!! உன் மேல எனக்கு இன்னும் முழுசா நம்பிக்கை வரலை...!! நம்பிக்கை வந்ததும் சொல்றேன்..!!"

"ஓகே சீனி.. விடு..!! வேறென்ன.. நாளைக்கு பேசலாமா..?"

"இரு இரு.. நான் இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்குறேன்..."

"என்ன..?"

"வீடியோ கால்..!!"

"வீடியோ காலா..? என்னய்யா சொல்ற..?"

"இந்த மெசினோட நான் ஒரு கேமரா கனெக்ட் பண்ணிருக்கேன்.. இப்போ நான் அதை ஆன் பண்றேன்.. உன் செல்போன்ல என் மூஞ்சி தெரியுதான்னு பாரு."

"யோவ்.. ஒரு நிமிஷம் இருய்யா.. இதுக்கு ஏதும் எக்ஸ்ட்ரா சார்ஜ் வராதே..?"

"ஐயையே.. ஏன் ஜூனி இவ்வளவு பிசினாரியா இருக்குற நீ..?"

"யோவ்.. ஏன் சொல்லமாட்ட..?? உனக்கென்ன.. கோடிக்கணக்குல அப்பீஸ் வச்சிருக்குற..? நான் கோல்ட்பில்டர் வாங்க கூட வக்கில்லாம இருக்குறேன்..!!"

"சரி சரி விடு.. ரொம்ப ஃபீல் பண்ணாத..!! இதுக்குலாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகாது.. தைரியமா பாரு..!! ம்ம்ம்.. கேமரா ஆன் பண்ணிட்டேன்.. பாரு..!!"

நான் காதோடு வைத்திருந்த செல்போனை இப்போது கையில் எடுத்து பார்த்தேன். ஸ்பீக்கர் மோட் ஆன் செய்தேன். என் செல்போன் திரை எங்கும் எக்கச்சக்கமாய் புள்ளிகள்..!! பின்பு அந்த புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து, சீனியரின் முகம் தெரிந்தது. சற்றே மங்கலாக..!! அப்புறம் அதுவும் மெல்ல மெல்ல தெள்ளத்தெளிவாக ஆனது..!!

"ஹாய் ஜூனி..!!!!!!!" சொல்லிக்கொண்டே சீனியர் கையசைத்தார்.

"சொல்லு சீனி.."

"நான் தெரியிறேனா..?"

"ம்ம்.. தெரியிற தெரியிற..!! ஏன் சீனி... நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத..."

"என்ன..??"

"உன் தலையை எதும் எறும்புப் புத்துக்குள்ள வுட்டுட்டயா..?"

"ஏன் கேக்குற..?"

"இல்ல.. எறும்பு கறும்புன மாதிரி.. மண்டைலாம் ஒரே முள்முள்ளா இருக்குதேன்னு கேட்டேன்..!!"

"நக்கலா..??? 2035ல இந்த ஹேர்ஸ்டைல்தான் ஜூனி.. ஃபேஷன்..!!"

"ஓஹோ..?? அப்புறம்.. உதடு என்ன.. ஒரு ஓரமா வீங்கிருக்கு..??"

"அதுவா..? அது.. லேட்டஸ்டா லேகாட்ட வாங்கினது..!!" சீனியர் தடித்துப் போன தனது உதட்டை தடவிக் கொண்டே சொன்னார்.

"ம்ம்ம்.. உன் மூஞ்சியை பாத்ததும் உன் மேல நம்பிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு சீனி.."

"தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..!! ஓவராலா எப்படி இருக்கு என் மூஞ்சி..?"

"ம்ம்ம்.. சந்தானத்துக்கு சயின்டிஸ்ட் கெட்டப் போட்ட மாதிரி இருக்கு..!!"

"சந்தானமா..? அது யாரு..?"

"நீ மறந்திருப்ப..!! நம்ம ரெண்டு பேருக்கும் அந்த ஆளு படத்தை போட்டுத்தான்.. இந்த ஆளு கதை எழுதிட்டு இருக்குறான்..!!"

"ஓஹோ..??"

"ஓகே சீனி.. உன் மூஞ்சியை பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்.. வேறென்ன..?"

"வேற ஒண்ணுமில்ல ஜூனி..!! நாளைக்கு பேசலாம்.. ஆல் தி பெஸ்ட்..!!"

"ஓகே சீனி.. குட்நைட்.."

"குட்நைட்..!!"

சொல்லிவிட்டு சீனியர் காலை கட் செய்தார். நானும் செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, கட்டிலில் விழுந்தேன். லேகாவை கழட்டி விடுகிறேன் என்று சீனியரிடம் சொல்லியாயிற்று..!! இப்போது அவளை கழட்டி விடவேண்டும்..!! என்ன செய்து கழட்டிவிடுவது..?? குப்புறப் படுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தோம்... நானும்.. என்னோடு சேர்ந்து ஸ்க்ரூவும்..!!





No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...