Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 7​


 




அத்தியாயம் 17

ஆதிரா உச்சபட்சமானதொரு குழப்பத்தில் உழன்று தவித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அகழி வந்ததிலிருந்தே நடந்த சில சம்பவங்கள் அவள் மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தன..!! இப்போது, அவளது கைபேசிக்கு வந்திட்ட மர்மமான அழைப்பு.. அவளது பழைய எண்ணிலிருந்து வருகிறது என்பதை அறிந்ததும்.. மனதில் ஏற்பட்டிருந்த அந்த கலக்க அதிர்வுகள் இன்னுமே வீரியமடைந்திருந்தன.. புத்திக்கு புலப்படாத ஒரு குழப்பச்சுழலுக்குள் சிக்கித் தவிப்பது போன்றொரு உணர்வு..!!

தனது பழைய கைபேசி எண்ணை ஆதிரா கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தாள்.. அதுவுமல்லாமல், அழைப்பு வந்த இரண்டுமுறையுமே அந்த எண்ணை சற்று கவனித்துப்பார்க்கவும் தவறியிருந்தாள்..!! அதனால்.. பார்த்ததுமே அவளுடைய பழைய எண் என்பது, சட்டென அவளுக்கு உறைக்கவில்லை..!!

இப்போது கதிர் சொன்னபிறகு.. அந்த எண்ணை ஓரிரு வினாடிகள் உற்று நோக்கியபிறகு.. ஒருவருடத்திற்கு முன்பு அவள் உபயோகித்த எண்தான் அது என்கிற உண்மை.. அவளது மூளையை பலமாக அறைந்தது..!! அந்த உண்மை புத்திக்கு புலப்பட்டதுமே.. அவளது தலைக்குள் கிர்ர்ர்ரென்று ஒரு குடைச்சல்.. மயக்கம் வரும்போல உடலில் ஒரு தடுமாற்றம்.. கண்களையும் முகத்தையும் ஒருமாதிரி சுருக்கிக் கொண்டாள்..!!

"எ..எப்படி கதிர் இது.. எ..என்னோட பழைய நம்பர்ல இருந்து.. எ..எனக்கு ஒன்னும் புரியல..!!"

"எனக்கும் எதுவும் புரியலைங்க ஆதிரா..!! கால் பண்ணினா 'நாட் இன் யூஸ்'ன்னு வேற வருது..!!"

"ம்ம்ம்ம்..!!"

"மைசூர் போனதுல இருந்தே இந்த புது நம்பர்தான் யூஸ் பண்றீங்களா..??"

"ஆமாம்..!!"

"உ..உங்களோட பழைய ஸிம்மை என்ன பண்ணுனிங்க..??"

கண்ணாமூச்சி ரே ரே - 6


 




அத்தியாயம் 15

அகல்விழியின் வீட்டில் இருந்து திரும்பிய ஆதிரா ஒருவித அயர்ச்சியுடனே காணப்பட்டாள்.. கதிரை அனுப்பிவைத்துவிட்டு வீடு புகுந்தவளுக்கு கால்கள் தளர்ந்து போனாற்போல் ஒரு உணர்வு..!! வலது முழங்காலுக்கு கீழிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது சுருக்கென்று ஒரு வலி.. உதட்டை கடித்து முகத்தை அவஸ்தையாக சுளித்தவள், ஊஞ்சல் சங்கிலியை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்..!! தடுமாற்றத்துடன் உடலை நகர்த்தி.. ஜோடியாக தொங்கிய இரண்டு ஊஞ்சல்களில் ஒன்றில்.. வசதியாக அமர்ந்து கொண்டாள்..!!

அவ்வாறே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்..!! நெஞ்சில் ஏறியிருந்த படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கியது.. ஆனால் புத்தியை ஆக்கிரமித்திருந்த சிந்தனைகள் அப்படியேதான் இருந்தன..!! ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக்கொண்டு, என்னவோ ஒரு யோசனையில் இருந்த ஆதிரா.. அவளுடைய சுய கட்டுப்பாடு இல்லாத அனிச்சை செயலாக.. தனது கால்களின் கட்டைவிரல்களால் தரையை உந்தித் தள்ளினாள்.. ஊஞ்சல் இப்போது மெல்ல அசைய ஆரம்பித்தது..!!

"க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!" - ஊஞ்சலின் இரும்புச்சங்கிலி உத்தரத்து ஆதார வளையத்தோடு உராய்ந்து எழுப்புகின்ற ஓசை.

அந்த ஊஞ்சலின் நிலையில்தான் ஆதிராவின் உள்ளமும் அப்போது இருந்தது.. ஒரு நிலையில் நில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.. அகழி வந்ததிலிருந்து நடந்த சம்பவங்களை ஒரு ஒழுங்கின்றி அசைபோட்டுக் கொண்டிருந்தது..!!

தாமிராவின் மறைவுக்கு குறிஞ்சிதான் காரணம் என்பதில் ஆரம்பத்திலிருந்தே ஆதிராவுக்கு சந்தேகம்.. தாமிராவுடைய ஆராய்ச்சி பற்றி நேற்று நினைவு வந்ததும், அவளுக்கு அந்த சந்தேகம் மேலும் வலுத்தது.. இப்போது அகல்விழி தொலைந்த செய்தியை அறிந்தபிறகு, தாமிராவின் மறைவில் மிகப்பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்பினாள்..!!

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...