புதிதாய் மணமான ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை அந்த பெண்ணின் பார்வையில் இருந்தே சொல்ல போகிறேன். திருமணம் நடந்த கொஞ்ச நாட்களில் கணவன் மனைவிக்குள் நடக்கும் சில நிகழ்வுகள்தான் மொத்தக் கதையுமே. இருவருக்கும் இடையிலான ஒரு சின்ன கருத்து வேறுபாடு அந்த நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. புதுமையான கதை என்றெல்லாம் கிடையாது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் மட்டுமே ஸ்பெஷல்..!! நான் பெண்ணின் பார்வையில் இருந்து மென்காமக்கதை எழுதுவது, இதுவே முதல் முறை..!! ஒரு ஆணாய் இருந்து பெண்ணின் உணர்வுகளை சொல்ல முற்படுவது சற்று சிரமமான காரியமாகத்தான் உணர்ந்தேன். என்னால் முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். நீங்கள் வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்
மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்
- (பெண்ணே..!!) எனது உயிருக்கு ஒப்பான இந்த மங்கல நூலை உனக்கு அணிவிக்கிறேன். (என்னுடனான இல்லற வாழ்க்கையில்) எனது சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு.. எல்லா வளமும் பெற்று.. நூறாண்டு நீ வாழ்வாயாக..!!
எபிஸோட் - I
வாசலில் கட்டியிருந்த வாழை மரம் கூட, சோர்ந்து போய் மேலும் தலையை தொங்கப் போட்டிருந்தது. பந்தலில் கட்டியிருந்த தோரணங்களில் பாதி உதிர்ந்து போயிருந்தன. கொட்டி வைத்த மணல் மீது ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வாண்டுகள் எல்லாம், அறைக்குள் முடங்கி அடங்கிப் போயிருந்தன. மாலையிலிருந்து பளீரென்று எரிந்துகொண்டிருந்த குழல் விளக்குகள் கூட, மின்சாரம் நிறுத்தப்பட்டு உறங்க ஆரம்பித்திருந்தன.
வீட்டின் உள்ளறைக்குள் நானும் களைத்துப் போய் அமர்ந்திருந்தேன். மேடையில் நெடுநேரம் நின்றிருந்ததால் கால்கள் சோர்வாகி கிடந்தன. அலைச்சல் ஏற்படுத்திய வியர்வையில் உடல் கசகசத்தது. மேனியில் தொங்கிய தங்க நகைகள் கொஞ்ச நேரமாய் உறுத்த ஆரம்பித்திருந்தன. இதில் இந்தப் பட்டுப் புடவை வேறு.. எப்போதடா அவிழ்த்து வீசுவோம் என்றிருந்தது..!! அப்போதுதான் அம்மா கதவு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
"நகையலாம் கழட்டி வச்சிடு பவித்ரா.. எல்லாம் பாக்ஸ்ல போட்டு வச்சிடு.. உன் மாமியார் ஏதும் செக் பண்ணனும்னா பண்ணிக்கட்டும்.."
"ம்ம்.. சரிம்மா.."
"குளிச்சுட்டு இந்த பொடவையை மாத்திக்கோ.."
சொன்னவள் கையிலிருந்தவைகளை கட்டிலில் வைத்தாள். மாற்றுப் புடவை.. மேட்சிங் ப்ளவுஸ்.. உள்ளாடைகள்..!! ஒருகணம் நிமிர்ந்து என் முகத்தை பார்த்து பெருமையாக புன்னகைத்தவள், என் நெற்றியில் கை வைத்து தலையை இதமாய் தடவினாள். பின்பு கதவு திறந்து வெளியேறினாள். கதவை அவள் சரியாக மூடாமல் செல்ல, அந்த கதவிடுக்கு வழியே ஹால் தெரிந்தது. ஹாலில் கிடந்த சோபாவில் அவர் தெரிந்தார்.